For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Asia cup - பாகிஸ்தானுக்கு எதிரான முதல் லீக் போட்டி.. இந்தியாவின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த கங்குலி

கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் ஆட்டத்தைப் பார்க்க தான் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஏனென்றால் ஒருநாள் கிரிக்கெட்டை பொருத்தவரையில் இந்தியாவும் பாகிஸ்தானும் கடைசியாக 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தான் மோதியது. அதன் பிறகு இவ்விரணிகளும் ஒரு முறை கூட ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை.

Asia cup 2023 - Sourav Ganguly Picks Indian team playing xi vs pakistan

இந்த நிலையில் வரும் செப்டம்பர் இரண்டாம் தேதி இந்தியா பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இதில் பிளேயிங் லெவன் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து கங்குலி ஒரு பேட்டி அளித்திருக்கிறார். அதனை தற்போது பார்க்கலாம். என்னுடைய அணியில் விராட் கோலி நம்பர் 3வது வீரராக களமிறங்குவார். அந்த இடத்தில் தன்னுடைய திறமையை அவர் நிரூபித்து விட்டார். இதனால் அந்த இடத்தை விட்டு மாற்றக்கூடாது.

மேலும் ஆசிய கோப்பை தொடரில் விராட் கோலி அதிக ரன்கள் எடுத்து சாதிப்பார். என்னுடைய பிளேயிங் லெவனில் ரோகித் சர்மாவும், கில்லும் தொடக்க வீரர்களாகவும், விராட் கோலி மூன்றாவது வீரராகும் களமிறங்குவார்கள். நடுவரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர் ஐந்தாம் இடத்தில் ஜடேஜாவும், ஆறாவது இடத்தில், கே எல் ராகுலையும் நான் தேர்வு செய்வேன்.

இடது கை பேட்ஸ்மேன் இந்திய அணியில் இல்லை என்பதால் ஜடேஜாவுக்கு இந்த ப்ரோமோஷன் வழங்க வேண்டும். மேலும் ஏழாவது மற்றும் எட்டாவது இடத்திற்கு ஆல்ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் அக்சர் பட்டேலை தேர்வு செய்வேன். ஒன்பதாவது வீரராக சுழற் பந்துவீச்சாளர் குல்தீப்க்கு வாய்ப்பு கொடுப்பேன். எஞ்சியுள்ள இரண்டு இடத்திற்கு பும்ரா மற்றும் முகமது சமியை தேர்வு செய்வேன் என்று கங்குலி கூறியுள்ளார்.

கங்குலி அறிவித்த அணியில் சூரியகுமார் யாதவுக்கு இடம் வழங்கப்படவில்லை. எனினும் முதல் இரண்டு ஆட்டத்தில் கே எல் ராகுல் விளையாட மாட்டார் என டிராவிட் அறிவித்துள்ளார். இதனால் கங்குலியின் இந்த அணியில் ராகுலுக்கு பதில் இஷான் கிஷன் விக்கெட் கீப்பராக இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கங்குலி அணியில் மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள், 3 வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, August 29, 2023, 19:05 [IST]
Other articles published on Aug 29, 2023
English summary
Asia cup 2023 - Sourav Ganguly Picks Indian team playing xi vs pakistan Asia cup - பாகிஸ்தானுக்கு எதிரான முதல் லீக் போட்டி.. இந்தியாவின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த கங்குலி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+