For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆசிய கோப்பை 2023 - வங்கதேசம், இலங்கை இன்று மோதல்.. 2 அணியிலும் முக்கிய வீரர்கள் இல்லாததால் சோகம்

பாலக்கலே : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆன இலங்கை வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இலங்கையில் உள்ள பாலக்கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இலங்கையும், வங்கதேசமும் தற்போது எதிரும் புதிருமாக மாறிவிட்டார்கள். களத்தில் ஒருவர் வெற்றி பெற்றால் மற்றவர்களை பார்த்து நாகினி டான்ஸ் ஆடி வெறுப்பேற்றுவார்கள்.

Asia cup 2023 - srilanka and Bangladesh facing each other today preview

இதனால் இன்றைய ஆட்டத்தில் முடிவில் யார் நாகினி டான்ஸ் ஆட போகிறார்கள் என்பதை காண ரசிகர்கள் அவளுடன் எதிர்நோக்கி இருக்கிறார்கள். எனினும் இரு அணிகளிலும் ஸ்டார் வீரர்கள் காயம் காரணமாக இடம்பெறாதது பின்னடைவாக கருதப்படுகிறது. இலங்கை அணியில் துஷ்மந்தா சமீரா, லகிரு குமாரா, தில்ஷான் மது ஷங்கா போன்ற வேகப்பந்துவீச்சாளரும் ஹசரங்கா போன்ற சுழற்பந்துவீச்சாளரும் காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகி இருக்கிறார்கள்.

எனினும் அந்த அணியில் சிஎஸ்கே வீரர் மகிஷ் தீக்ஷனா மற்றும் மதிஷா பதிரானா போன்ற வீரர்கள் உள்ளனர். மேலும் இலங்கை அணி பேட்டிங்கில் நிலைத்து நின்று விளையாடினால் மட்டுமே அவர்களால் வெற்றி பெற முடியும். இதனால் கருணரத்னே, நிசாங்கா, அசலங்கா, தனஜெய் டி சில்வா, சனாகா போன்ற வீரர்கள் தலையில் மிகப்பெரிய பாரம் இருக்கிறது.

இதேபோன்று வங்கதேச அணியிலும் லிட்டன் தாஸ் காயம் காரணமாக கடைசி நேரத்தில் விலகி இருப்பது பெரும் சரிவை அந்த அணிக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் ஷகிபுல் ஹசன் முஸ்பிகுர் ரஹீம், மெஹந்தி ஹசன், டஸ்கின் அஹமத் போன்ற வீரர்கள் பெரிய இன்னிங்ஸை ஆடினால் மட்டுமே இலங்கையை கட்டுப்படுத்த முடியும்.

கடைசியாக வங்கதேச அணி இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றி இருப்பது அந்த அணிக்கு மிகப்பெரிய உத்வேகத்தை கொடுத்திருக்கும். இரு அணிகளும் 51 முறை ஒருநாள் கிரிக்கெட்டில் மோதி இருக்கிறார்கள்.இதில் வங்கதேசம் ஒன்பது முறை வெற்றி பெற்றிருக்கிறது.இலங்கை 40 முறை வெற்றி பெற்றிருக்கிறது. இரண்டு போட்டிகள் மழையால் தடை பட்டிருக்கிறது.நாளைய போட்டியில் மதிய நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

Story first published: Thursday, August 31, 2023, 6:15 [IST]
Other articles published on Aug 31, 2023
English summary
Asia cup 2023 - srilanka and Bangladesh facing each other today preview ஆசிய கோப்பை 2023 - வங்கதேசம், இலங்கை இன்று மோதல்.. 2 அணியிலும் முக்கிய வீரர்கள் இல்லாததால் சோகம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+