Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை -கோலிக்கு பரிசு கொடுத்து ஆசையை சொன்ன இலங்கை வீரர்.. கவலைப்படாதீங்க என பதில் அளித்த கிங்

கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி விளையாடுவார் ரன் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது. ஏனென்றால் தற்போது விராட் கோலிக்கு பதில் மழை தான் விளையாடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ஓய்வு நாளில் வராத மழை போட்டி நடைபெறும் போது சரியாக குறிக்கிட்டு ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்கிறது.

Asia cup 2023 - Srilankan net bowler gifted prize for virat kohli with message

இந்த நிலையில் பாகிஸ்தான் போட்டிக்கு முன்பு இந்திய அணி வீரர்கள் பயிற்சி செய்து வந்தனர். அப்போது இலங்கையின் உள்நாட்டு வீரர்கள் விராட் கோலிக்கு பந்து வீசி வந்தனர். அப்போது பயிற்சி முகாம் முடிந்ததும் இலங்கை வீரர்கள் விராட் கோலியை சுற்றிக்கொண்டு கிரிக்கெட் தொடர்பாக தங்களுடைய சந்தேகங்களை கேட்டனர்.அப்போது இலங்கை நாட்டு கிரிக்கெட் வீரர் ஒருவர் கிரிக்கெட் விளையாட்டில் எப்படி சிறப்பாக விளையாடுவது உங்களுடைய வெற்றி ரகசியம் என்ன என்று கேள்வி கேட்டார்.

அதற்கு பதில் அளித்த விராட் கோலி உங்களுக்கு ஒரு விஷயம் செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டால், நிச்சயமாக அதனை செய்ய உங்களுக்கு முழு தகுதியும் இருக்கிறது என அர்த்தம். களத்தில் கடினமாக பயிற்சி மேற்கொள்ளுங்கள். அதன் பிறகு மனதளவில் நீங்கள் ரன் அடிப்பது போலவும் விக்கெட் எடுப்பது போலவும் நினைத்து பாருங்கள்.

இதை இரண்டையும் விடாமல் செய்யுங்கள். நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். களத்தில் எப்போதுமே நூறு சதவீதத்தை கொடுங்கள் என விராட் கோலி கூறினார். அப்போது கிருஷன் என்ற இலங்கை வீரர் விராட் கோலிக்கு நினைவு பரிசு ஒன்றை அளித்தார். அதில் நீங்கள் விரைவில் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதம் அடிக்க வேண்டும்.

நீங்கள் அதனை எட்டுவீர்கள் என நான் நம்புகிறேன். ஆல் தி பெஸ்ட் என்று கூறியிருந்தார். இதனை படித்த விராட் கோலி கவலைப்படாதீங்க என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார். விராட் கோலியின் இந்த அறிவுரையும் அவருக்கு வீரர்கள் அளித்த பரிசு தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Story first published: Monday, September 11, 2023, 16:38 [IST]
Other articles published on Sep 11, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+