Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா, பாகிஸ்தான் போட்டிக்கு மழை ஆபத்து.. ஆட்டம் மழையால் ரத்தானால் என்ன ஆகும்? ரிசர்வ் டே இருக்கா?

பாலக்கலே : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு தற்போது மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் கடைசியாக இரு அணிகளும் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தான் விளையாடினார்கள். அதன் பிறகு தற்போது ஆசிய கோப்பை தொடரில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இரு அணிகளும் பல பரிட்சை நடத்த உள்ளன.

 Asia cup 2023 - What will happen if ind vs pak match abandoned due to rain

இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு மழை ஆபத்து இருப்பது தெரியவந்துள்ளது. போட்டி நடைபெறும் பாலக்கலேவில் நாளை 91 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் போட்டி நடைபெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. ஒருவேளை போட்டி ரத்தானால் என்ன நடக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

தற்போது எல்லாம் மிகப்பெரிய போட்டிகள் நடைபெறும் நிலையில் ஐசிசி ரிசர்வ் நாளை அறிவித்திருக்கிறது. ஆனால் ஆசிய கோப்பை போட்டிக்கு அப்படி எந்த ஒரு ரிசர்வ் டேவும் அறிவிக்கப்படவில்லை. மழையால் போட்டி ரத்தானால் அது மீண்டும் நடத்தப்படாது. இந்த நிலையில் மழையால் ஆட்டம் கைவிடப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும்.

அந்த வகையில் பாகிஸ்தான் 3 புள்ளிகள் உடன் முதலிடத்திலும், இந்தியா ஒரு புள்ளி உடன் இரண்டவது இடத்திலும் இருக்கும். இதை அடுத்து வரும் திங்கட்கிழமை இந்தியா நேபாளம் அணிக்கு மோதும் ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும். இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும்.

ஒரு வேலை அந்தப் போட்டியும் மழையால் தடை பட்டால் மீண்டும் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பிரித்து வழங்கப்படும். அதன் அடிப்படையில் இந்திய அணி சூப்பர் ஃபோர் சுற்றுக்கு சென்று விடும். எனினும் உலகக்கோப்பை தொடருக்கு முன்பு பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடினால் அது வீரர்களுக்கு நல்ல பயிற்சி களமாக அமையும். இதனால் இந்த போட்டி மழையால் ரத்தானால் அது இரு அணிகளுக்குமே மிகவும் ஏமாற்றமாக இருக்கும். எனினும் சூப்பர் ஃபோர் மற்றும் இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் மோத அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, September 1, 2023, 12:12 [IST]
Other articles published on Sep 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+