Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை 2025.. ஹாங்காங்கை 94 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆப்கானிஸ்தான்

ஆசிய கோப்பை தொடருக்கான முதல் போட்டியில் ஹாங்காங் அணியை 94 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. அபுதாபியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய தொடக்க வீரர் ரஹ்மத்துல்லா குர்பாஸ் ஐந்து பந்துகளில் 8 ரன்களின் ஆட்டமிழந்து வெளியேறினார். இதே போன்று இப்ராஹீம் சார்டன் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார்.எனினும் மற்றொரு தொடக்க வீரரான செதுக்குல்லா அட்டல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் இன்னிங்சை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

Afghanistan Beat Hongkong

41 பந்துகளில் அவர் அரை சதம் அடித்தார். அந்த அணியில் அனுபவ வீரர் முகமது நபி 26 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்தார்.இதனை அடுத்து களமிறங்கிய குலாப்தீன் நைப் ஐந்து ரன்களில் வெளியேற அஸ்மத்துல்லா உமர்சாய் எதிர்கொண்ட முதல் பந்தில் இருந்து அதிரடி காட்டினார்.ஹாங்காங் பந்துவீச்சை சுக்குநூறாக உடைத்த அவர் 20 பந்துகளில் அரை சதத்தை கடந்தார். இதில் 5 சிக்ஸர்களும், இரண்டு பவுண்டரிகளும் அடங்கும்.

21 பந்துகளில் அவர் 53 ரன்கள் சேர்த்தார். கரீம் ஜன்னத் இரண்டு ரன்களிலும், ரஷித் கான் மூன்று ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.எனினும் செடிக்குல்லா அட்டல் கடைசி கட்டத்தில் கொஞ்சம் அதிரடி காட்ட 52 பந்துகளில் அவர் 73 ரன்கள் எடுத்தார்.இதில் ஆறு பவுண்டரிகளும், மூன்று சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்திருக்கிறது.

ஹாங்காங் பந்துவீச்சு தரப்பில் ஆயுஸ் சுக்லா நான்கு ஓவர்கள் வீசி 54 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதேபோன்று கின்சீட் ஷா மூன்று ஓவர்களில் 24 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.அந்த அணியின் ஈசான் கான் மட்டும் நான்கு ஓவர்களில் 28 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

இதனையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹாங்காங் அணி பேட்டிங்கில் கடுமையாக தடுமாறியது. முன்வரிசை வீரர்கள் வந்த வேகத்தில் நடையை கட்டினர். அந்த அணியில் பாபர் ஹாயத் 39 ரன்கள் மட்டுமே எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சு தரப்பில் ஃபரூக்கி, குலாப்தீன் நைப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Story first published: Wednesday, September 10, 2025, 0:15 [IST]
Other articles published on Sep 10, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+