Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Asia Cup: வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான்.. ஆசிய கோப்பையில் ரெக்கார்டு.. ஹாங்காங் படைத்த மோசமான சாதனை

அபுதாபி: 2025 ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே ஆப்கானிஸ்தான் அணி, ஹாங்காங் அணியை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. மேலும், ஆசியக் கோப்பை வரலாற்றிலேயே பெரிய வெற்றி பெற்ற அணிகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் இடம் பிடித்துள்ளது. இந்தப் போட்டியில் மேலும் சில சாதனைகளும் நிகழ்ந்தன. அந்த சாதனைகள் என்ன? இந்தப் போட்டியில் என்ன நடந்தது? என்று பார்க்கலாம்.

செப்டம்பர் 9 ஆம் தேதி அபுதாபியில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, செடிக்குல்லா அடல் மற்றும் அஸ்மத்துல்லா ஒமர்சாய் ஆகியோரின் அதிரடி அரைசதங்களின் உதவியுடன் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது.

asia-cup-2025-afghanistan-registered-third-biggest-victory-in-asia-cup-against-hong-kong

தொடக்க வீரர் செடிக்குல்லா அடல் 52 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுமுனையில், அஸ்மத்துல்லா ஒமர்சாய் வெறும் 21 பந்துகளில் 53 ரன்கள் விளாசி ரசிகர்களை மகிழ்வித்தார். இந்த ஜோடியின் அதிரடியால், ஆப்கானிஸ்தான் அணி கடைசி கட்ட ஓவர்களில் ரன் வேகத்தை கணிசமாக உயர்த்தியது.

இமாலய இலக்கை துரத்திய ஹாங்காங் அணி, தொடக்கம் முதலே தடுமாறியது. ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. பாபர் ஹயாத் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 39 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், ஹாங்காங் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியை சந்தித்தது.

பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் ஆதிக்கம் செலுத்திய ஆப்கானிஸ்தான், பல புதிய சாதனைகளையும் படைத்துள்ளது. அதே சமயம், ஹாங்காங் அணி சில மோசமான சாதனைகளை தன்வசப்படுத்தியுள்ளது.

புதிய சாதனைகளும், மோசமான பதிவுகளும்:

ஆசிய கோப்பையில் 3வது பெரிய வெற்றி:

ஆப்கானிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற இந்த வெற்றி, ஆண்கள் டி20 ஆசிய கோப்பை வரலாற்றில் ரன்கள் அடிப்படையில் 3வது பெரிய வெற்றியாகும். இதற்கு முன், 2022ல் பாகிஸ்தான் அணி ஹாங்காங்கை 155 ரன்கள் வித்தியாசத்திலும், அதே ஆண்டில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை 101 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தியதே முதல் இரண்டு பெரிய வெற்றிகளாகும்.

மோசமான ஃபீல்டிங்:

இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணி வீரர்கள் மொத்தம் 8 கேட்சுகளை தவறவிட்டனர். இதன் மூலம் 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆண்கள் டி20 சர்வதேசப் போட்டியில் தவறவிடப்பட்ட அதிகபட்ச கேட்சுகளின் எண்ணிக்கையைச் சமன் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன், 2024ல் ஸ்காட்லாந்து - ஆஸ்திரேலியா, 2025ல் ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் போட்டிகளிலும் தலா 8 கேட்சுகளைத் தவறவிடப்பட்டுள்ளன.

ரன் அவுட்டில் ஹாங்காங்கின் பரிதாபம்:

2024ஆம் ஆண்டிலிருந்து டி20 போட்டிகளில் அதிக முறை ரன் அவுட் ஆன அணிகளின் பட்டியலில் ஹாங்காங் முதலிடத்தில் உள்ளது. இதுவரை 34 முறை ரன் அவுட் ஆகியுள்ள அந்த அணி, இந்தப் போட்டியிலும் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை ரன் அவுட் மூலம் இழந்தது. இதில் 29 ரன் அவுட்கள் முதல் ஏழு இடங்களில் களமிறங்கிய வீரர்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அபார வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி, ஆசிய கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. அதேசமயம், ஹாங்காங் அணி தனது ஃபீல்டிங் மற்றும் பேட்டிங்கில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Story first published: Wednesday, September 10, 2025, 11:13 [IST]
Other articles published on Sep 10, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+