ஆசிய கோப்பை 2025.. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட அணிகள் வீரர்கள் விவரம்
சென்னை: ஆசிய கோப்பை 2025ஆம் ஆண்டு தொடர் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. இந்தத் தொடர், 2026-ல் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு பயிற்சி களமாக இருப்பதற்காக டி20 வடிவத்தில் நடைபெறுகிறது.
எட்டு அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் இறுதிப் போட்டி செப்டம்பர் 28 அன்று நடைபெற உள்ளது. ஆசிய கோப்பையின் கடைசி டி20 தொடர் 2022-ல் நடைபெற்றது, அப்போது ஷனகா தலைமையிலான இலங்கை அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது. இந்த நிலையில், யுஏஇயை தவிர மற்ற 7 அணிகளும் தங்களது வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதனை தற்போது பார்க்கலாம்.

ஆப்கானிஸ்தான்: ரஷீத் கான் (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஸத்ரான், டார்விஷ் ரசூலி, செடிகுல்லா அட்டால், அஸ்மத்துல்லா ஒமர்சாய், கரீம் ஜனத், முகமது நபி, குல்பதின் நைப், ஷராஃபுதின் அஷ்ரஃப், முகமது இஷாக், முஜீப் உர் ரஹ்மான், அல்லா கசன்ஃபர், நூர் அஹ்மத், ஃபரித் மாலிக், நவீன்-உல்-ஹக், ஃபசல்ஹக் ஃபரூக்கி
வங்கதேசம்: லிட்டன் தாஸ் (கேப்டன்), தன்ஸித் ஹசன், பர்வேஸ் ஹொசைன் எமோன், சைஃப் ஹசன், தவ்ஹித் ஹ்ரிதோய், ஜாகர் அலி அனிக், ஷமிம் ஹொசைன், குவாஸி நூருல் ஹசன் சோஹன், ஷாக் மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், நசும் அஹ்மத், முஸ்தஃபிஸுர் ரஹ்மான், தன்ஸிம் ஹசன் சாகிப், தஸ்கின் அஹ்மத், ஷோரிஃபுல் இஸ்லாம், ஷைஃப் உத்தின்
ஹாங்காங்: யாசிம் முர்தஸா (கேப்டன்), பாபர் ஹயாத், ஸீஷான் அலி, நியாஸகத் கான் முகமது, நஸ்ருல்லா ராணா, மார்ட்டின் கோட்ஸி, அன்ஷுமன் ரத், கல்ஹான் மார்க் சல்லு, ஆயுஷ் ஆஷிஷ் ஷுக்லா, முகமது ஐஸாஸ் கான், அதீக் உல் ரெஹ்மான் இக்பால், கின்சித் ஷா, ஆதில் மெஹ்மூத், ஹரூன் முகமது அர்ஷத், அலி ஹசன், ஷாஹித் வாசிஃப், கசன்ஃபர் முகமது, முகமது வஹீத், அனஸ் கான், எஹ்சான் கான்
ஓமன்: ஜதிந்தர் சிங் (கேப்டன்), ஹம்மத் மிர்ஸா, வினயக் ஷுக்லா, சுஃப்யான் யூசுஃப், ஆஷிஷ் ஒடேதரா, ஆமிர் கலீம், முகமது நதீம், சுஃப்யான் மெஹ்மூத், ஆர்யன் பிஷ்ட், கரன் சோனவாலே, ஸிக்ரியா இஸ்லாம், ஹஸ்நைன் அலி ஷா, ஃபைஸல் ஷா, முகமது இம்ரான், நதீம் கான், ஷகீல் அஹ்மத், சமய் ஸ்ரீவஸ்தவா
இந்தியா: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில், அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ஜிதேஷ் ஷர்மா, அக்ஸர் படேல், ஜஸ்ப்ரீத் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங்
பாகிஸ்தான்: சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அஹ்மத், ஃபஹீம் அஷ்ரஃப், ஃபக்ஹர் ஸமான், ஹாரிஸ் ரவூஃப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலத், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், முகமது வசீம் ஜூனியர், சாஹிப்ஸாதா ஃபர்ஹான், சய்ம் ஆயூப், சல்மான் மிர்ஸா, ஷாகீன் அஃப்ரிடி, சுஃப்யான் மொகிம்
இலங்கை: சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிஸ்ஸங்க, குசல் மென்டிஸ், குசல் பெரேரா, நுவனிது பெர்னாண்டோ, கமிந்து மென்டிஸ், கமில் மிஷாரா, தசுன் ஷனக, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, சமிக கருணாரத்னே, மஹீஷ் தீக்ஷனா, துஷ்மந்த சமீரா, பினுரா பெர்னாண்டோ, நுவன் துஷாரா, மதீஷ பதிரணா


Click it and Unblock the Notifications