துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் போட்டி நடுவரான ஆண்டி பயர்கிராப்டை நீக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விடுதலை மிரட்டலுக்கு ஐசிசி அடிப்பணிந்ததாக முதலில் செய்தி வெளியான நிலையில், கடைசியில் மெகா டிவிஸ்ட் ஒன்றை வைத்தது. இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் போட்டி நடுவராக செயல்பட்ட ஆண்டி பைகிராப்ட் இரு அணி வீரர்களும் கைகுலுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆன்டி பைகிராப்டை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், அவர் ஆசிய கோப்பை தொடரில் இருந்து நீக்கப்படவில்லை என்றால் தாங்கள் எஞ்சிருக்கும் போட்டிகளில் பங்கேற்க மாட்டோம் என எச்சரிக்கை விடுத்தது.

முதலில் இதற்கு ஐசிசி ஒப்புதல் வழங்கவில்லை என கூறப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க மாட்டோம் என உறுதிப்பட தெரிவித்தது. குறிப்பாக இந்த போட்டிக்கான செய்தியாளர்கள் சந்திப்பில் பாகிஸ்தான் அணி கேப்டன் புறக்கணித்தார்.
மேலும் பயிற்சி செய்ய பாகிஸ்தான் வீரர்கள் வரவில்லை என செய்திகள் வெளியானது. இதனால் பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறினால் அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், பொருளாதார நஷ்டம் ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளில் மட்டும் போட்டி நடுவராக ஆண்டி பைகிராஃப்ட் செயல்பட மாட்டார் என ஐசிசி அறிவித்ததாக செய்திகள் வெளியானது.
அதற்கு பதிலாக ரிச்சி ரிச்சர்ட்ஸன் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. இதன் மூலம் பாகிஸ்தானின் கோரிக்கை ஏற்கப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் செய்திகளை பரப்பினர். இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மிரட்டலுக்கு ஐசிசி தலைவரான ஜெயிஷா அடிப்பணிந்துவிட்டதாக அந்த நாட்டு ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் இறுதியில் டிவிஸ்ட் வைத்த ஐசிசி, போட்டி நடுவராக ஆண்டி பயர்கிராஃப்ட் தான் தொடர்வார் என்றும், நீங்கள் வேண்டும் என்றால் வெளியேறுங்கள் என்று கூறிவிட்டது. இதனால், வேறு வழியின்றி பாகிஸ்தான் இந்தப் போட்டியில் விளையாடியது.