Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 மாசம் ஜாலியா இருந்துச்சா? இனி யாரும் எஸ்கேப் ஆக முடியாது.. இந்திய அணிக்கு திரும்ப பிசிசிஐ கண்டிஷன்

மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஆகஸ்ட் மாதம் மூன்றாவது வாரத்தில் அறிவிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சூழலில் ஐபிஎல் தொடருக்கு பின் 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றது. இந்த தொடரில் பல வெள்ளை நிற பந்து கிரிக்கெட் ஆடும் ஸ்டார் வீரர்கள் இடம் பெறவில்லை. இதனால் ஐபிஎல் தொடருக்கு பின் சுமார் இரண்டு மாதம் வரை ஓய்வில் சில நட்சத்திர வீரர்கள் இருந்திருக்கிறார்கள்.

India cricket team

இந்த தருணத்தில் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்றால் கண்டிப்பாக இந்த விஷயத்தை செய்து ஆக வேண்டும் என பிசிசிஐ கண்டிஷன் ஒன்றை போட்டு உள்ளது. அதன்படி பிசிசிஐயால் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட வீரர்கள் அனைவரும் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வந்து தங்களுடைய உடல் தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.

அதன்படி இந்திய அணியின் நட்சத்திர வீரர் கடந்த ஜூலை மாதம் இறுதியில் பெங்களூர் வந்து தன்னுடைய உடல் தகுதியை நிரூபித்து இருக்கின்றார். இதேபோன்று ஹர்திக் பாண்டியாவும் பெங்களூருக்கு வந்து தன்னுடைய உடல் தகுதியை நிரூபிக்க பிசிசிஐ உத்தரவிட்டிருக்கின்றது. இந்திய டி20 அணியின் கேப்டனான சூரியகுமார், ஹெர்னியா ஆப்ரேஷன் செய்திருப்பதால் அவர் உடல் தகுதியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

ஏற்கனவே பெங்களூரில் தனது பேட்டிங் பயிற்சியை சூரியகுமார் தொடங்கி விட்டார். எனினும் அவருடைய உடல் தகுதி இன்னும் 100 சதவீதத்தை எட்டவில்லை. இதனால் சூரியகுமார் மேலும் ஒரு வாரம் பெங்களூருவில் தங்கி இருக்க வேண்டும் என்று பிசிசிஐ மருத்துவ குழு தெரிவித்து இருக்கின்றது.

இந்திய டி20 அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவ் 22 போட்டிகளில் செயல்பட்டு 17 போட்டிகளில் வெற்றியை பெற்று இருக்கிறார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சூரியகுமார் 717 ரன்கள் குவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா, ஆசிய கோப்பை போட்டியில் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி அணியுடன் தன்னுடைய முதல் போட்டியில் விளையாடுகிறது.

Story first published: Monday, August 11, 2025, 7:54 [IST]
Other articles published on Aug 11, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+