Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவை வீழ்த்தும் சந்தோசம் வேறு எதிலும் கிடையாது.. இலங்கை முன்னாள் வீரர் ரஸில் அர்னால்ட் பேச்சு

துபாய்: இந்திய அணியை வீழ்த்துவது மூலம் கிடைக்கும் சந்தோஷம் வேறு எதிலும் கிடைக்காது என்று முன்னாள் இலங்கை அணி வீரர் ரசூல் அர்னால்டு தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவும் இலங்கையும் சந்திக்க வாய்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில் இலங்கை அணிக்காக 44 டெஸ்ட், 180 சர்வதேச ஒரு நாள் மற்றும் ஒரு சர்வதேச டி20 போட்டிகளில் ஆசிய கோப்பை தொடர் குறித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார். இதில்," இம்முறை இலங்கை அணி கோப்பையில் வெல்வதற்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக நினைக்கின்றேன்."

Russell Arnold

"இந்த தொடர் அனைத்து அணிகளுக்கும் சவாலானதாக இருக்கும். இந்த தொடரை நான் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் சமீப காலமாக வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடி வருகிறது. எனவே ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுக்கு ஆபத்தை தருவார்கள்."

"குறிப்பாக இந்திய அணியை தான் அனைவரும் வீழ்த்த வேண்டும் என்று நினைப்பார்கள். ஏனென்றால் அவர்கள் பலமான பணியாக இருக்கிறார்கள். இலங்கை அணியை பொறுத்தவரை அனைத்தும் சரியான திசையில் செல்கின்றது. வீரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடுகிறார்கள். சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட என்ன தேவையோ அதனை எங்கள் வீரர்கள் செய்து வருகிறார்கள்."

"இலங்கை அணியில் நிசாங்கா, குசல் மெண்டிஸ் போன்ற வீரர்கள் இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பார்கள். இதேபோன்று பந்துவீச்சில் துஷ்மந்தா சமீரா பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நினைக்கின்றேன். ஆப்கானிஸ்தான் அணியை ஆசியாவின் இரண்டாவது சிறந்த அணி என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது."

"ஏனென்றால் அவர்களும் தடுமாறுவதை பார்க்க முடிகிறது. அவ்வப்போது சில போட்டிகளில் நன்றாக விளையாடுகிறார்கள். ஆனால் தொடர்ந்து ஒரே மாதிரி விளையாடுவது தான் மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஒவ்வொரு அணிக்கும் பலமான வீரர்களை விட பெஞ்சில் அமர்கிறார்கள். ஆனால் இலங்கை அணியில் அந்த அளவுக்கு பலம் இல்லை. இந்தியாவால் ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு வீரர்களை மாற்றி விளையாட வைக்க முடியும்."

"ஆனால் இலங்கை அணிக்கு அந்த சாதகம் கிடையாது. இந்தியாவுடன் விளையாடுவது என்பது எப்போதுமே கடும் சவால்களை தரும். இந்தியாவுடன் விளையாட ஒவ்வொரு அணிகளும் ஆர்வமாக இருக்கின்றது. திறமையை பொருத்தவரை இந்தியா உச்சத்தில் இருக்கிறார்கள். இந்தியாவிடம் இருந்து பல விஷயங்களை இலங்கை அணி கற்றுக் கொள்ள முடியும். என்னை கேட்டால் இந்தியாவை வீழ்த்துவது மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் கிடைக்காது. இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் இலங்கை அணி விளையாட வேண்டும்" என்று ரஸில் அர்னால்ட் தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, September 13, 2025, 8:18 [IST]
Other articles published on Sep 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+