Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை 2025 தொடரில் அதிக ரன்கள், அதிக விக்கெட் எடுக்க போவது யார்? தினேஷ் கார்த்திக் கணிப்பு

மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2025 ஆம் ஆண்டு சீசன் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ மற்றும் ஓமன் ஆகிய அணிகள் குரூப் ஏ பிரிவிலும், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஆசிய கண்டத்தில் உள்ள டாப் எட்டு அணிகள் மோதும் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இந்த தொடரில் அதிக ரன்கள், அதிக விக்கெட் எடுக்கும் வீரர் யார் என்பதை தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கணித்திருக்கிறார்.

Dinesh Karthik

இது குறித்து பேசி அவர் ஆசிய கோப்பை 2025 ஆம் ஆண்டு சீசனில் அதிக ரன்கள் எடுக்கும் வீரராக இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் இருப்பார் என கணத்திருக்கின்றார். கில் கடைசியாக ஜூலை மாதம் 2024 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக சர்வதேச t20 போட்டியில் விளையாடினார்.

அதன் பிறகு ஒரு ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் சர்வதேச டி20 போட்டிக்கு திரும்பி இருக்கின்றார். கடந்த ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் 650 ரன்கள் குவித்துள்ள சுப்மன் கில் 155 என்ற ஸ்டிரைக் ரைட்டை வைத்திருந்தார். அது மட்டும் இல்லாமல் தற்போது இங்கிலாந்துக்கு எதிராக நடந்து முடிந்த ஐந்து டெஸ்ட் போட்டிகளில் 754 ரன்கள் அவர் குவித்து நல்ல பார்மில் இருக்கின்றார்.

இந்த நிலையில் ஆசிய கோப்பை தொடரில் அதிக விக்கெட் எடுக்கப் போகும் வீரராக வருண் சக்கரவர்த்தியை தினேஷ் கார்த்திக் கனத்திருக்கின்றார். 34 வயதான வருண் சக்கரவர்த்தி இதுவரை 12 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 31 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இதேபோன்று ஆசிய கோப்பை 2025 ஆம் ஆண்டு சீசனில் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வெல்லும் என்று தினேஷ் கார்த்திக் கனத்திருக்கின்றார்.

இதேபோன்று ஆசிய கோப்பை தொடரில் கவனிக்கப்பட வேண்டிய வீரராக ஜித்தேஷ் சர்மா இருப்பார் என்றும் தினேஷ் கார்த்திக் கணித்துள்ளார்.இந்திய அணி தற்போது கடைசியாக விளையாடிய ஐந்து டி20 தொடரிலும் வெற்றி பெற்றிருக்கிறது. கடைசியாக விளையாடிய 20 போட்டிகளில் 17 ஆட்டங்களில் இந்திய அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, September 7, 2025, 20:11 [IST]
Other articles published on Sep 7, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+