துபாய்: ஆசிய கோப்பை 2025 ஆம் ஆண்டு தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில் பாகிஸ்தான் அணி ரன்னர் அப் பட்டத்தை வென்றிருக்கிறது. இந்த நிலையில் ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை தேர்வு செய்து கனவு அணி ஒன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதில் ஆறு இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். பாகிஸ்தான் வீரர் ஒருவர் மட்டும்தான் இடம்பெற்றுள்ளார். இந்த நிலையில் தொடக்க வீரராக அபிஷேக் ஷர்மா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்த தொடரில் மூன்று அரைசதம் அடித்துள்ள அவர் மொத்தமாக 314 ரன்கள் அடித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இலங்கை வீரர் நிசாங்கா உள்ளார். இவர் இந்தியாவுக்கு எதிராக ஒரு சதம் அடித்திருக்கிறார். இந்த தொடரில் ஆறு போட்டிகளில் 261 ரன்கள் அடித்திருந்தார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் சூரியகுமார் யாதவ் இடம்பெற்றிருக்கிறார். இவர் இந்த தொடரில் 7 போட்டிகளில் மொத்தமாகவே 72 ரன்கள் தான் அடித்து இருக்கிறார்.
இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தியதற்கு காரணமாக அவருக்கு இடம் கிடைத்திருக்கிறது. இந்தப் பட்டியலில் நான்காம் இடத்தில் சஞ்சு சாம்சன் இருக்கின்றார். இவர் இந்த அணியின் விக்கெட் கீப்பராகவும் இடம்பெற்றுள்ளார். மொத்தமாக 7 போட்டிகளில் விளையாடி 132 ரன்கள் அடித்திருக்கின்றார். இதுபோன்று இந்த பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இந்திய வீரர் திலக் வர்மா இடம் பிடித்திருக்கிறார்.
இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 69 ரன்களை அவர் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டு இருந்தார். இந்தப் பட்டியலில் ஏழாவது இடத்தில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் சிவம் துபே உள்ளார். பந்துவீச்சில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய அவர், ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் 22 பந்துகளில் 33 ரன்கள் அடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் எட்டாம் இடத்தில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் ஹசரங்கா இடம் பிடித்துள்ளார். ஆறு போட்டியில் விளையாடியுள்ள அவர் கைப்பற்றி இருக்கிறார். இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் இருக்கின்றார். இவர் 7 போட்டிகளில் மொத்தமாக 17 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்த தொடரில் அதிகம் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.
இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் ஆப்ரிடி இருக்கிறார். இந்த அணியில் இடம்பெற்ற ஒரே பாகிஸ்தான் வீரர் இவர் மட்டும்தான் ஏழு போட்டியில் விளையாடி உள்ள அவர் 10 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். பேட்டிங்களும் அவர் 83 ரன்கள் அடித்துள்ளார். இந்த பட்டியலில் பத்தாம் இடத்தில் வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் இருக்கிறார். இவர் இந்த தொடரில் 6 போட்டிகளில் ஒன்பது விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
இந்த தொடரில் 11வது இடத்தில் யுஏஇ அணியின் வீரர் ஜூனைத் சித்திக் இருக்கின்றார். இவர் மூன்று போட்டிகளில் விளையாடி ஒன்பது விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இந்தத் தொடரில் 12வது வீரராக பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் பர்கான் இடம் பெற்றுள்ளார். இந்தத் தொடரின் பும்ரா ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாலும் அவருக்கு இந்த கனவு அணியில் இடம் கிடைக்கவில்லை.