Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SL: சூப்பர் ஓவருக்கு பின் இந்திய அணிக்கு சிக்கல்.. அதிரடி பேட்ஸ்மேன், ஆல் ரவுண்டருக்கு காயம்

துபாய்: 2025 ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசிப் போட்டியில், இலங்கை அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி இந்திய அணி திரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டிக்குப் பிறகு, இந்திய அணியின் முக்கிய வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோருக்கு ஏற்பட்ட காயம் குறித்த அப்டேட்டை, இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் மார்னே மோர்கல் வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், இந்த இரு வீரர்களின் உடற்தகுதி குறித்த செய்தி, ரசிகர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன் குவித்த அபிஷேக் ஷர்மா காயத்தில் சிக்கி இருப்பது கவலையை ஏற்படுத்தி உள்ளது.

Asia Cup 2025 Hardik Pandya Abhishek Sharma Injury Scare Indian Management Gives Update Ahead of Asia Cup Final

இலங்கைக்கு எதிரான போட்டியின் போது, இந்திய அணி பந்துவீசிக் கொண்டிருந்தபோது ஹர்திக் பாண்டியா மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகிய இருவரும் தசைப்பிடிப்பால் (Cramps) அவதிப்பட்டனர்.

இலங்கை இன்னிங்ஸின் முதல் ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா, அந்த ஓவரின் முதல் பந்திலேயே குசல் மெண்டிஸை டக் அவுட் ஆக்கினார். ஆனால், அந்த ஓவரை வீசி முடித்த பிறகு, தனது இடது தொடைப் பகுதியைப் பிடித்துக்கொண்டு வலியால் அவதிப்பட்டார். அதன்பிறகு, அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார், போட்டி முடியும் வரை மீண்டும் களத்திற்குத் திரும்பவில்லை.

இந்தப் போட்டியின் ஒன்பதாவது ஓவரின்போது, ஓடும்போது அபிஷேக் ஷர்மா தனது வலது தொடையில் அசௌகரியமாக உணர்ந்தார். பத்தாவது ஓவரில் அவரும் மைதானத்தை விட்டு வெளியேறினார். போட்டியின் மீதமுள்ள நேரத்தில், இருவருக்கும் ஐஸ் கட்டிகள் மற்றும் தசைப்பிடிப்பைக் குறைக்க உதவும் 'பிக்கிள் ஜூஸ்' (ஊறுகாய் நீர்) கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பயிற்சியாளர் மார்னே மோர்கல் அளித்த விளக்கம்:

போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மார்னே மோர்கல், வீரர்களின் காயம் குறித்து விளக்கமளித்தார். "இருவருமே போட்டியின் போது தசைப்பிடிப்பால் அவதிப்பட்டனர். ஹர்திக் பாண்டியாவின் நிலையை இன்று இரவும், நாளை காலையும் கண்காணித்து, அதன்பிறகு ஒரு முடிவை எடுப்போம். ஆனால், அபிஷேக் ஷர்மா நலமாக இருக்கிறார்," என்று மோர்கல் தெரிவித்தார். இதன் மூலம், அபிஷேக் ஷர்மா இறுதிப் போட்டியில் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஹர்திக் பாண்டியாவின் நிலை குறித்து நாளை (சனிக்கிழமை) தெரியவரும்.

இறுதிப் போட்டிக்கு முன்பு பயிற்சி இல்லை!

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டிக்கு முன்பு, இந்திய அணிக்கு சனிக்கிழமை அன்று எந்தவிதமான வலைப் பயிற்சியும் இருக்காது என்றும் மார்னே மோர்கல் உறுதிப்படுத்தியுள்ளார். "வீரர்கள் ஓய்வெடுப்பதுதான் இப்போது முக்கியம். அவர்கள் ஏற்கனவே ஐஸ் பாத் சிகிச்சையைத் தொடங்கிவிட்டனர். போட்டி முடிந்த உடனேயே மீள் சிகிச்சை (Recovery) தொடங்கிவிட்டது. சிறந்த மீள் சிகிச்சை என்பது நன்றாக உறங்குவதும், கால்களுக்கு ஓய்வு கொடுப்பதும்தான்" என்றார்.

"வீரர்களுக்குத் தனிப்பட்ட நீச்சல் பயிற்சி அமர்வுகள் ஏற்பாடு செய்யப்படும். அதன்பிறகு, மசாஜ் சிகிச்சைகள் அளிக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பெரிய போருக்கு அவர்கள் மனதளவில் தயாராக வேண்டும். மிகக் குறைந்த இடைவெளியே உள்ளது, எனவே புத்திசாலித்தனமாகச் செயல்படுவதுதான் முக்கியம். நிச்சயமாக எந்தப் பயிற்சியும் இருக்காது" என்று மோர்கல் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Story first published: Saturday, September 27, 2025, 10:12 [IST]
Other articles published on Sep 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+