Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Asia cup: இந்தியா ஏ, இந்தியா பி அணியை விளையாட வையுங்கள்.. பைனலில் இந்திய மெயின் அணியுடன் மோதுவாங்க- முரளி கார்த்திக்

மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் தமிழக கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன் சேர்க்கப்படாதது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளி கார்த்திக் கடும் விமர்சனத்தை வைத்திருக்கின்றார். ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு நிறத் தொப்பியை வென்றவரை 15 பேர் கொண்ட அணியில் கூட சேர்க்கவில்லையா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் இந்திய அணியில் தற்போது யார் யாரெல்லாம் தேர்வு செய்யப்படவில்லை என்று பாருங்கள். கடந்த ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு நிற தொப்பியை வென்ற சாய் சுதர்சனுக்கு கூட அணியில் இடமில்லை. மற்றொரு தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தருக்கும் அணியில் இடம் இல்லை.

Asia Cup 2025

சிஎஸ்கே அணி கேப்டனான ருதுராஜ் அணியில் இடம் தரப்படவில்லை. அவ்வளவு எண் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரரான ஆர்ஸ்தீப் சிங் பிளேயிங் லெவனில் இடம் பெறவில்லை இத்தகைய வீரர்களை எல்லாம் நாம் தேர்வு செய்யவில்லை.

அதுவும் பாகிஸ்தானுக்கு எதிராக நாம் விளையாடிய விதத்தை பார்த்தால், ஆச்சரியமாக இருக்கிறது. குறிப்பாக ஷாகின் அப்ரிடி போன்ற வீரரின் முதல் பந்தை அபிஷேக் ஷர்மா அடித்த விதம் பிரமிக்க வைக்கிறது. இறங்கி வந்து அவர் ஷாகின் அபிரிடி பந்தை அடித்தார். இப்படிப்பட்ட திறமையை தான் நாம் பாராட்டுகிறோம் நாம், ஹாங்காங், ஓமன் போன்ற அணிகளை பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருக்கின்றோம்.

இவர்கள் எல்லாம் திறமை அடிப்படையில் கொஞ்சம் கீழே தான் இருக்கின்றார்கள். நேற்றைய ஆட்டத்தை பார்த்ததிலிருந்து இந்த தொடரில் மிக சிறந்த அணியாக இந்தியா தான் விளங்குகிறது. இந்தியாவை ஒப்பிட்டு பேசும் அளவுக்கு எந்த அணியும் இல்லை. ரோகித் சர்மா, விராட் கோலி இல்லாமல் நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதை டி20 கிரிக்கெட்டில் பார்த்து விட்டோம்.

ஒருவேளை இந்தியா ஏ இந்தியா பி அணிகள் இந்த தொடரில் விளையாடினால் இறுதிப்போட்டியில் அவர்களும் தகுதி பெற்று இருப்பார்கள். அந்த அளவுக்கு இந்திய வீரர்கள் தலைமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஐபிஎல் தொடரிலிருந்து பல ஆண்டுகள் விளையாடி கிடைக்கப் பெற்ற திறமையான வீரர்கள் இவர்கள்.

பெரும் ரசிகர்களுக்கு மத்தியில் உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட்டை விளையாடி திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஐபிஎல் தொடருக்கும் சர்வதேச கிரிக்கெட்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. இந்திய அணியை தேர்வு சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. வரும் டி20 உலக கோப்பையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றேன் என்று முரளி கார்த்திக் தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, September 15, 2025, 23:17 [IST]
Other articles published on Sep 15, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+