Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹரிஸ் ரவுஃப்க்கு இந்திய அணி தந்த செம நோஸ் கட்.. இனி வெளியில் முகத்தை காட்ட முடியாது

அபுதாபி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் போர் சுற்று ஆட்டத்தில் புதன்கிழமை இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்தப் போட்டியை முன்னிட்டு இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்சேட் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, சஞ்சு சாம்சனுக்கு ஏன் நடுவரிசையில் இடம் தருகிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "சாம்சனுக்கு இப்போது இரண்டு வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அந்த ரோலை எப்படி வகிக்க வேண்டும் என்பதை அவர் இன்னும் கண்டுபிடித்து வருகிறார். பாகிஸ்தான் போட்டியில் ஆடுகளமும் சற்று கடினமாக இருந்தது."

Ind vs Pak

"சுப்மனும் அபியும் முதல் இடங்களில் சிறப்பாக விளையாடி வருவதாலும், கேப்டன் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்வதாலும், திலக் வர்மாவின் ஆட்டத்தை கருத்தில் கொண்டு, நாங்கள் 5வது இடத்திற்கு ஒரு வீரரை தேடுகிறோம். சாம்சன்தான் அந்த இடத்திற்கு சிறந்தவர் என்று நாங்கள் நம்புகிறோம்."

"அவர் எதிர்காலத்தில் இந்த ரோலை சிறப்பாக செயல்படுத்துவார் என்று எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை." என்று தெரிவித்தார். சாம்சன் ஓமானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 3வது இடத்தில் பேட்டிங் செய்து 45 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். ஆனால், துபாயில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் 5வது இடத்தில் களமிறங்கி, 17 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே எடுத்து வீழ்ந்தார்."

"ஆசிய கோப்பையில் இதுவரை நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால், முதல் வரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி வருவதால், நடு மற்றும் கீழ் வரிசை பேட்ஸ்மேன்களுக்கு அதிக நேரம் ஆட முடியவில்லை. மேலும், ஜிதேஷ் ஷர்மா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை."

இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த டென் டோசேட், "அபுதாபியில் சில வீரர்களுக்கு ஆடுகளத்தில் நேரம் கிடைக்க முயற்சித்தோம். ஆனால், ஆசிய கோப்பை போன்ற முக்கியமான தொடர்களை முன்னோக்கி பார்க்கும்போது, ஜிதேஷ் அல்லது ரிங்கு போன்றவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது கடினமாக உள்ளது. ஆனால், பயிற்சியில் வீரர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர்."

"இருதரப்பு தொடர்களில் தான் வீரர்களுக்கு அவர்களின் திறனை காட்ட வாய்ப்பு கொடுக்க முடியும். இந்த தொடரின் , எந்த நேரத்திலும் வேகத்தை குறைக்க முடியாது. இதுதான் நாங்கள் வீரர்களை வெவ்வேறு இடங்களில் பயன்படுத்த முயற்சிக்கும் போது ஏற்படும் துரதிர்ஷ்டவசமான விளைவு." என்று தெரிவித்தார்.

இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தானில் பரப்பப்படும் வதந்தியை அந்நாட்டு வீரர் ஹரிஷ் ராஜ் மைதானத்தில் சைகையை காட்டி கொண்டாடியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த டோஷெட் நாங்கள் இங்கு கிரிக்கெட் மட்டுமே விளையாட வந்தோம் அவர் செய்த எங்களுடைய பிரச்சனை இல்லை என்று கூறினார். இந்தியா தனது இரண்டாவது சூப்பர் 4 போட்டியில் வங்கதேசத்தை புதன்கிழமை துபாயில் சந்திக்கிறது. பின்னர், செப்டம்பர் 26 அன்று அதே இடத்தில் இலங்கையை எதிர்கொள்ளும்.

Story first published: Tuesday, September 23, 2025, 22:52 [IST]
Other articles published on Sep 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+