துபாய்: ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சுப்மன் கில் சேர்க்கப்பட்ட நிலையில் சஞ்சு சாம்சன் நடுவரிசையில் களமிறங்குகிறார். இது தற்போது பல விவாதத்தை ஏற்படுத்திருக்கின்றது. சாம்சன் நடுவரசையில் டி20 போட்டிகளை பொருத்தவரை பெரிய அளவு சோபித்தது கிடையாது.
இதனால் சாம்சன் இடத்தை மாற்றுவது ஏன் என்று பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஒருவேளை நடுவரிசையில் விக்கெட் கீப்பிங் செய்யும் பேட்ஸ்மேன் தேவை என்றால் ஜித்தேஷ் சர்மாவை தேர்வு செய்திருக்கலாமே என்று பலரும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இது குறித்து இந்திய அணியில் பேட்டிங் பயிற்சியாளர் ஷிதான்சு கோடாக் விளக்கம் அளித்துள்ளார். அதில், "சாம்சன் டி20 கிரிக்கெட்டில் நம்பர் 5, 6ஆவது இடத்தில் பெரிய அளவு களம் இறங்கியது கிடையாது. ஆனால் அதற்காக அவரால் அந்த இடத்தில் விளையாட முடியாது என்று அர்த்தம் கிடையாது."
"சாம்சன் எந்த பேட்டிங் வரிசையில் களம் இறங்கினாலும், சிறப்பாக விளையாடக்கூடியவர். அணிக்கு என்ன தேவையோ? அதனை கேப்டனும் பயிற்சியாளரும் முடிவு செய்வார்கள். இதனால் அவர் எந்த இடத்தில் பேட்டிங் செய்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வார். சாம்சன் மட்டும் அல்ல நீங்கள் அணியில் உள்ள எந்த வீரர்களும் எந்த பேட்டிங் வரிசையில் விளையாடினாலும் நிச்சயமாக சிறப்பாக செயல்படுவார்கள்."
"நீங்கள் அணியில் நான்கு அல்லது ஐந்து அதிரடி வீரர்கள் இருக்கிறார்கள். இந்த வீரர்கள் போட்டியின் சூழலுக்கு ஏற்ப விளையாடுவார்கள். நீங்கள் அணியை பொறுத்தவரை அனைவரும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் விளையாடக்கூடிய அளவு தயாராக இருக்கிறார்கள். கடந்த போட்டியில் சஞ்சு சாம்சன் பேட்டிங் வரிசையில் ஐந்தாவது வீரராக களமிறங்க இருந்தார்."
"ஆனால் அடுத்த போட்டியில் அவர் எந்த இடத்தில் வேண்டுமானாலும் விளையாடுவார். அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களுக்கும் என்னென்ன பொறுப்பு என்பதை நாங்கள் முன்பே சொல்லிவிட்டோம். இதனால் சூழலுக்கு ஏற்ப தான் நாங்கள் முடிவை தேர்வு செய்வோம்" என்று கோடாக் தெரிவித்துள்ளார். இதுவரை சஞ்சு சாம்சன் இந்திய அணிக்காக ஐந்தாவது இடத்தில் பேட்டிங் வரிசையில் களமிறங்கி மொத்தமாகவே 62 ரன்கள் தான் எடுத்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 20 ஆகும். இதுவே தொடக்க வீரராக மூன்று சதங்கள் உட்பட 522 ரன்கள் அடித்துள்ளார்.