Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Asia Cup: பயம் காட்டிய ஓமன்.. பும்ரா, வருண் இல்லாமல் தடுமாறிய இந்திய பவுலிங்.. கடைசி நிமிடம் வரை பரபர

அபுதாபி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஓமன் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி போராடி வெற்றி பெற்றது. லீக் சுற்றில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி மூன்றாவது ஆட்டத்தில் ஓமன் அணிக்கு எதிராக களமிறங்கியது.

ஏற்கனவே சூப்பர் 4 சுற்றில் நம்பர் 1 அணியாக இந்தியா தகுதி பெற்றுவிட்டது. இதனால் சமீபிரதாய ஆட்டம் என்பதால் இந்த போட்டியில் பும்ரா வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ஹர்ஷித் ராணா மற்றும் ஆர்ஸ்தீப் சிங் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

India beat oman

இந்த நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதுவரை விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக பேட்டிங் வரிசை முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டது. தொடக்க வீரராக விளையாடும் கில், 5 ரன்களில் ஆட்டம் இழக்க அபிஷேக் ஷர்மா 15 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார்.

ஹர்திக் பாண்டியா துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆக அக்சர் பட்டேல், அதிரடியாக விளையாடி 13 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிவம் துபே, தமக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை வீணடித்தார். எனினும் இன்றைய ஆட்டத்தில் மூன்றாவது வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் அதிரடியை காட்டினார்.

ஒரு பக்கத்தில் விக்கெட் விழுந்தாலும் மறுபக்கம் சஞ்சு சாம்சன் தனது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி 45 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்தார். இதில் மூன்று பவுண்டரி, மூன்று சிக்சர்கள் அடங்கும். இறுதியில் திலக் வருமா 18 பந்துகளில் 29 ரன்களும் ஹர்ஷித்ராணா 8 பந்துகளில் 13 ரன்களும் எடுக்க இந்திய அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்திருந்தது.

இதை அடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஓமன் அணி களம் இறங்கியது. இந்திய அணியில் பும்ரா வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இல்லாத நிலையில் மற்ற வீரர்களின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. இதனை பயன்படுத்திக்கொண்டு கத்துக்குட்டி அணியான ஓமன் அபாரமாக விளையாடியது. தொடக்க வீரரான ஜதேந்தர் 32 ரன்கள் எடுக்க முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 56-ரன்கள் சேர்த்தது.

இதேபோன்று இரண்டாவது விக்கெட்டுக்கு விளையாடிய அமீர் கலீம் மற்றும் அபாரமாக எதிர்கொண்டு கடும் நெருக்கடி கொடுத்தனர். ஒரு கட்டத்தில் ஓமன் அணி வெற்றி பெற்று விடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இதனால் இந்திய ரசிகர்கள் இருக்கையில் நுனியில் அமர்ந்து கொண்டு பதற்றத்துடன் போட்டியை கண்டனர்.

சிறப்பாக விளையாடிய அமீர்கலிம் 46 பந்துகளின் 64 ரன்கள் எடுத்திருந்தபோது ஒரு சிக்சர் அடிக்க முற்பட்டார். அப்போது ஹர்திக் பாண்டியா அபாரமாக ஓடிவந்து கேட்சை பிடித்தார். இது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. எனினும் ஹம்மத் மிஸ்ரா அபாரமாக விளையாடி 30 பந்துகளில் எல்லாம் அரை சதம் அடித்தார். இதனால் கடைசி இரண்டு ஓவரில் ஓமன் அணிக்கு 40 ரன்கள் எடுக்க வேண்டும் என நிலைமை மாறியது.அப்போதும் ஓமன் அணி வீரர்கள் போராடினர். இறுதியில் அந்த அணி கடுமையாக போராடி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Story first published: Saturday, September 20, 2025, 0:04 [IST]
Other articles published on Sep 20, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+