Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை 2025: 2 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் ஜாம்பவானுக்கு அணியில் வாய்ப்பு

மும்பை: ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி வரும் 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. டி20 உலக கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக இம்முறை ஆசிய கோப்பை போட்டி டி20 போட்டிகளாக நடத்தப்பட உள்ளது.

இந்த போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டதாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு செய்தியாளர்கள் சந்திப்பு மூலம் நடத்தப்படும் என்று தெரிகிறது. இந்த அணியில் டெஸ்ட் கேப்டன் கில் சேர்க்கப்படுவார் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது.

Asia Cup 2025

ஆனால் தற்போது கில்லுக்கு ஓய்வு வழங்கப்படும் என தெரிகிறது. இந்திய டி20 அணியில் அபிஷேக் ஷர்மா,சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க ஜோடிகள் ஆக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் மூன்றாவது வீரராக திலக் வர்மா, நன்றாக விளையாடி வருகிறார். நான்காம் இடத்தில் சூரிய குமார் யாதவும், ஐந்தாம் இடத்தில் ஹர்திக் பாண்டியாவும் விளையாட உள்ளனர்.

இதனால் முதல் ஐந்து இடத்தில் கில்லுக்கு தற்போது இடம் கிடைக்கவில்லை. இதனால் அவர் இந்திய அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு இல்லை என தெரிகிறது. அது மட்டுமில்லாமல் நட்சத்திர வீரர் பும்ராவுக்கும் ஓய்வு வழங்கப்படும் என தெரிகிறது. பும்ராவை வெறும் டெஸ்ட் போட்டிக்கு மட்டும் பயன்படுத்த பிசிசிஐ முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில் இந்த அணியில் சுழற் பந்துவீச்சாளர் சாகலுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. சாகல் கடைசியாக 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய அணிக்காக கடைசியாக விளையாடி இருக்கின்றார். அதன் பிறகு இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

டி20 உலக கோப்பையில் சாகல் இடம் பெற்று இருந்த பிறகும் அவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் ஆசிய கோப்பை போட்டியில் அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று தமிழக கிரிக்கெட் வீரர் சுதர்சன் ஆசிய கோப்பை போட்டியில் கூடுதல் வீரராக சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, August 15, 2025, 21:17 [IST]
Other articles published on Aug 15, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+