Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs OMAN- இந்திய அணி பிளேயிங் லெவனில் 2 மாற்றத்துக்கு வாய்ப்பு.. டாசிலும் புதிய திட்டம்

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்று இருக்கிறது. இந்த நிலையில் சமீபரதாய ஆட்டமாக வெள்ளிக்கிழமை ஓமன் அணிக்கு எதிராக இந்திய அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த போட்டியில் இந்திய அணி சில மாற்றங்களை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அது என்னவென்று தற்போது பார்க்கலாம். தற்போது சூப்பர் ஃபோர் சுற்று இன்னும் கொஞ்சம் கடினமாக மாறும். இதனால் அதற்கு ஏற்றார் போல் சில மாற்றங்களை இந்திய அணி செய்ய உள்ளது. மேலும் முதல் இரண்டு போட்டிகளில் பங்கேற்காத வீரர்களுக்கு ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

Asia cup 2025

சூரிய குமார் யாதவ், திலக் வர்மா சிவம் துபே போன்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி விட்டார்கள். இதனால் பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு தரப்பட உள்ளது.

இதனால் ஓமன் அணிக்கு எதிராக போட்டியில் சஞ்சு சாம்சன் மூன்றாவது வீரராக களம் இறங்கலாம். இதே போன்று இந்தியா விளையாடி முதல் இரண்டு போட்டிகளிலும் இரண்டாவதாக தான் பேட்டிங் செய்தது. இதனால் பனிப்பொழிவில் பந்து வீசும் அனுபவம் இந்தியா இன்னும் பெறவில்லை. இதன் காரணமாக ஓமன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் என்றால் முதலில் பேட்டிங் செய்து, அதன் பின் பந்து வீசும் முயற்சியில் ஈடுபட திட்டமிட்டு இருக்கிறது.

இதன் மூலம் பேட்டிங்கில் 20 ஓவரும் களமிறங்கி அனைத்து வீரர்களும் பேட்டிங் செய்ய முடியும். இதேபோன்று பனிப்பொழிவு நேரத்திலும் பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்து ஸ்கோரை தற்காத்துக் கொள்ள முடியும்.
சூப்பர் ஃபோர் சுற்றில் இடம் உறுதியாகிவிட்டதால் இந்திய அணி இந்த நடவடிக்கையில் ஈடுபடலாம் என தெரிகிறது.

இதேபோன்று அணியில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படலாம் என்று தெரிகிறது. அந்த வகையில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதில் அஸ்வின் ஆட்டத்திற்குள் வரலாம். அதே போல் குல்தீப் யாதவ் அல்லது அக்சர் பட்டேல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ரிங்கு சிங் அணிக்குள் வரலாம். இல்லையென்றால் திலக் வர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ரிங்கு சிங் அணிக்குள் கொண்டு வரப்படலாம். இதன் மூலம் நடப்பு தொடரில் வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பைத் தர கம்பீர் முடிவு எடுத்திருக்கிறார்.

இந்திய அணி பிளேயிங் லெவன்: 1. அபிஷேக் சர்மா, 2, சுப்மன் கில், 3, சஞ்சு சாம்சன், 4, ரிங்கு சிங்/ திலக் வர்மா, 5, ஹர்திக் பாண்டியா, 6, சூர்யகுமார், 7, அக்சர் பட்டேல், 8,சிவம் துபே, 9, ஆர்ஸ்தீப் சிங், 10. வருண் சக்கரவர்த்தி, 11, குல்தீப் யாதவ்

Story first published: Thursday, September 18, 2025, 13:55 [IST]
Other articles published on Sep 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+