Asia cup: இந்திய அணியில் 3 வீரர்களுக்கு புரோமோஷன்.. ரசிகர்களுக்கு குட் நியூஸ்
மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி நாளை வெள்ளிக்கிழமை கடைசி லீக் ஆட்டத்தில் ஓமன் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி அபுதாபி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு எட்டு மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணி ஏற்கனவே சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் பேட்டிங் ஆர்டரில் சில மாற்றங்களை கொண்டுவர இந்திய அணி முடிவு எடுத்திருக்கிறது. அது என்னவென்று தற்போது பார்க்கலாம். இந்திய அணியில் சில வீரர்கள் இந்த தொடரில் பேட்டிங் தேர்வு செய்யவில்லை.

சூப்பர் 4 சுற்றுக்கு முன்பு வாய்ப்பு கிடைக்காத வீரர்கள் பேட்டிங்கில் விளையாடி அனுபவத்தை பெற வேண்டும் என்பதற்காக இந்திய அணி தங்களுடைய பேட்டிங் வரிசையில் அதிரடி மாற்றத்தை செய்ய உள்ளது. அதன்படி ஐந்தாவது வீரராக களமிறங்குவார் என அறிவிக்கப்பட்ட சாம்சன், கடந்த இரண்டு போட்டிகளிலும் பேட்டிங் செய்ய வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதனால் ஓமன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சனுக்கு மூன்றாவது வீரராக களமிறங்க வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இதன் மூலம் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்பு அவர் ஆடுகளம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். இதேபோன்று இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹரிதிக் பாண்டியாவும் பேட்டிங் செய்ய வரவில்லை.
இதனால் அவருக்கும் ஓமன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நம்பர் நான்காவது வீரராக களமிறக்க வாய்ப்பு வழங்கப்படும். இதனால் முக்கிய ஆட்டத்தில் அவருக்கு பேட்டிங்காலும் அணியை காப்பாற்ற முடியும். இதேபோன்று கடந்த டி20 உலக கோப்பை போட்டியில் நடு வரிசையில் களமிறங்கி வந்த அக்சர் பட்டேல், இந்த தொடரில் பேட்டிங் செய்யவில்லை.
இதனால் அவருக்கும் ஓமன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ப்ரோமோஷன் தர கம்பீர் முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது. இதன் மூலம் சூப்பர் 4 சுற்று ஆட்டத்திற்கு முன்பு இந்திய அணி வீரர்கள் அனைவரும் பேட்டிங் செய்த அனுபவம் கிடைத்திருக்கும். இது போன்று ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றால் இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்ய வேண்டும் என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications