Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை இந்திய அணி அறிவிப்பு.. சுப்மன் கில் துணை கேப்டனாக நியமனம்.. பும்ராவுக்கும் இடம்

மும்பை: ஆசிய கோப்பை தொடர்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கர் மும்பையில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதில் சூரியகுமார் யாதவ் தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அது மட்டுமில்லாமல் டி20 போட்டிகளில் இடம் கிடைக்காமல் இருந்த சுப்மன் கில்லுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது. இதேபோன்று இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக விலகிய பும்ராவும், ஆசிய கோப்பை தொடரில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

Asia cup India squad

தொடக்க வீரர்களாக அபிஷேக்சர்மா, சஞ்சு சாம்சன், சுப்மன் கில் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதேபோன்று நடுவரிசையில் திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ், சிவம் துபே போன்ற வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

சுழற் பந்துவீச்சாளர்களாக அக்சர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் என மூன்று வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. வேகப்பந்துவீச்சாளர்கள் படையில் பும்ரா, ஆர்ஸ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதே போன்று ஸ்ரேயாஸ் ஆகியோருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரின் பெயரையும் பிசிசிஐ பரிசீரிக்கவில்லை. தற்போது கில் சேர்க்கப்பட்டிருப்பதால் அவர் தொடக்க வீரராக களமிறங்குவாரா இல்லை சஞ்சு சாம்சன் தான் அந்த பொறுப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்திய அணி விவரம்: 1. சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), 2.சுப்மன் கில் (துணை கேப்டன்), 3.திலக் வர்மா, 4. சஞ்சு சாம்சன், 5. அபிஷேக் சர்மா, 6. ஹர்திக் பாண்டியா, 7.சிவம் துபே, 8. ரிங்கு சிங், 9.பும்ரா, 10. ஆர்ஸ்தீப் சிங், 11. ஹர்சித் ரானா, 12. வருண் சக்கரவர்த்தி, 13. அக்சர் பட்டேல், 14. ஜித்தேஷ் சர்மா, 15. குல்தீப் யாதவ்

Story first published: Tuesday, August 19, 2025, 15:10 [IST]
Other articles published on Aug 19, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+