Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை 2025: 15 பேர் கொண்ட இந்திய அணியில் யாருக்கு எல்லாம் வாய்ப்பு

மும்பை: ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட உள்ளது. மும்பையில் செய்தியாளர்களை சந்தித்து தேர்வு குழு தலைவர் அஜித் அகாதர் அணியை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

செவ்வாய் கிழமை மதியம் 1.30 மணியளவில், இந்திய அணி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், பும்ரா உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற மில்லியன் டாலர் கேள்வியாக எழுந்துள்ளது.

Asia cup India squad

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுவார் என உறுதியாகிவிட்டது. அது மட்டும் இல்லாமல் தொடக்க வீரராக அபிஷேக் ஷர்மாவும், சஞ்சு சாம்சனும் களமிறங்க பிசிசிஐ முடிவு இருப்பதாக தெரிகிறது. இதனால் கில், ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டால் அது குழப்பத்தை ஏற்படுத்தும் என்று முடிவில் கம்பீர் இருக்கின்றார்.

இதைப் போன்று மூன்றாவது வீரராக திலக் வர்மாவு,ம் நான்காவது வீரராக சூரியகுமார் யாதவுமே களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. ஐந்தாவது வீரராக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்படுவார். ஆறாவது வீரராக ரிங்கு சிங், ஏழாவது வீரராக அக்சர் பட்டேல் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

எட்டாவது வீரராக குல்தீப் யாதவ், அல்லது ரவி பிஷ்ணாய்க்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படலாம். ஒன்பதாவது வீரராக தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி அணியில் இடம் பெறுவார். பத்தாவது வீரராக ஆர்ஸ்தீப் சிங் விளையாடக்கூடும். 11 வது வீரராக பும்ரா இடம்பெற அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இந்த தொடரில் பும்ரா விளையாட ஆர்வம் காட்டியிருப்பதாக ஏற்கனவே தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று கூடுதல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மன் ஆக ஜித்தேஷ் சர்மா விளையாட வாய்ப்பு இருக்கிறது. 14 வது வீரராக ஆல்ரவுண்டர் சிவம் துபே இடம்பெறக்கூடும். 15 வது வீரராக முகமது சிராஜுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

இந்திய அணி உத்தேச பட்டியல்: 1. சஞ்சு சாம்சன், 2.அபிஷேக் சர்மா, 3. திலக் வர்மா, 4.சூர்யகுமார் யாதவ், 5. ஹர்திக் பாண்டியா, 6. ரிங்கு சிங், 7.அக்சர் பட்டேல், 8. வருண் சக்கரவர்த்தி, 9, குல்தீப் யாதவ், 10. பும்ரா, 11.ஆர்ஸ்தீப் சிங், 12.ஜித்தேஷ் சர்மா, 13. சிவம் துபே, 14.ரவி பிஸ்னாய், 15, முகமது சிராஜ்

Story first published: Monday, August 18, 2025, 21:31 [IST]
Other articles published on Aug 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+