Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டிய இந்தியா: அமீரக அணியை எளிதாக வீழ்த்திய இந்திய பேட்ஸ்மேன்கள்!

துபாய்: 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் அமீரக அணி நிர்ணயித்த எளிதான வெற்றி இலக்கை, இந்திய அணி வெறும் 4.3 ஓவர்களில் எட்டி, ஒரு சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் அபாரமான தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல், வெறும் 57 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Asia Cup 2025 India vs UAE India s Dominant Batting Seals 9-Wicket Victory Over UAE

பின்னர், 58 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, தனது பேட்டிங் பலத்தை வெளிப்படுத்தியது. தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா 16 பந்துகளில் அதிரடியாக 30 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவருக்குப் பிறகு களமிறங்கிய சுப்மன் கில், 9 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 2 பந்துகளில் 7 ரன்கள் எடுத்தும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

வெற்றி இலக்கை எட்ட, 16 பந்துகள் மீதமிருந்த நிலையில், இந்திய அணி மிக விரைவாக வெற்றியை உறுதி செய்தது. இந்த அமோக வெற்றி, இந்தத் தொடரில் இந்திய அணியின் பலத்தை மற்ற அணிகளுக்கு உணர்த்தியுள்ளது.

இந்தப் போட்டியில் அமீரக அணி முதலில் பேட்டிங் செய்தபோது, 47 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து நல்ல நிலையில் இருந்தது. ஆனால், குல்தீப் யாதவ் வீசிய ஒன்பதாவது ஓவரில், அந்த அணி அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பிறகு, வரிசையாக விக்கெட்டுகளை இழந்த அமீரகம், கடைசி 10 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளையும், சிவம் துபே 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அடுத்து, 58 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களான அபிஷேக் ஷர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் அதிரடியாக ஆடினர். அதிலும் அபிஷேக் ஷர்மா, இந்திய இன்னிங்ஸின் முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து மிரட்டினார்.

தொடர்ந்து அதிரடியாக ஆடி, 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை விளாசிய அபிஷேக், வெறும் 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். எனினும், அவர் அவுட் ஆன போதே, இந்திய அணி 48 ரன்களை எடுத்திருந்தது.

அதன் பிறகு, சுப்மன் கில் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் இணைந்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவுக்கு 'ஆட்டநாயகன்' விருது வழங்கப்பட்டது.

இந்தப் வெற்றியின் மூலம், இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் குரூப் ஏ பிரிவில் இரண்டு புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்தியாவின் அடுத்த போட்டி பாகிஸ்தான் அணியுடன் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, September 10, 2025, 22:15 [IST]
Other articles published on Sep 10, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+