Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2025 ஆசியக் கோப்பை: இந்தியா ஆடும் போட்டியை எப்படி பார்ப்பது? நேரடி ஒளிபரப்பு மற்றும் ஸ்ட்ரீமிங்

துபாய்: 2025 ஆசியக் கோப்பை தொடர் செப்டம்பர் 9 அன்று துவங்கிய நிலையில் இந்திய அணி தனது முதல் போட்டியை இன்று (செப்டம்பர் 10) விளையாட உள்ளது. ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக இந்திய அணி இந்தப் போட்டியில் மோத உள்ளது. இந்தப் போட்டி எப்போது துவங்கும்? எந்த சேனல், மற்றும் ஓடிடி தளங்களில் பார்க்கலாம் என பார்க்கலாம்.

இந்த ஆண்டு தொடர் டி20 வடிவத்தில் நடைபெறுவதால், மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை. இருப்பினும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மூன்று முறை வரை மோத வாய்ப்பிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Asia Cup 2025 India vs UAE where to watch Telecast venue time of the match

2025 ஆசியக் கோப்பையில் இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் போட்டி குறித்த ரசிகர்கள் அறிய வேண்டிய முழு விவரங்கள் இங்கே:

ஆசியக் கோப்பை 2025 நடைபெறும் இடங்கள்

2025 ஆசியக் கோப்பை, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இரண்டு மைதானங்களில் நடத்தப்படுகிறது: துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானம். இதில் இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் மோத உள்ள போட்டி துபாயில் நடைபெற உள்ளது.

ஆசியக் கோப்பை 2025 போட்டி தொடங்கும் நேரம்

இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் உட்பட இந்த தொடரின் போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 8:00 மணிக்குத் தொடங்கும். இருப்பினும், அபுதாபியில் நடைபெறும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையேயான போட்டி மட்டும் இந்திய நேரப்படி மாலை 5:30 மணிக்குத் தொடங்கும்.

ஆசியக் கோப்பை 2025 டாஸ் நேரம்

இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் போட்டிக்கான டாஸ் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு நடைபெறும். 8 மணிக்கு போட்டி துவங்கும்.

இந்தியாவில் ஆசியக் கோப்பை 2025-ஐ எங்கு நேரலையில் பார்க்கலாம்?

இந்தியாவில், சோனி ஸ்போர்ட்ஸ் டென் நெட்வொர்க்கில் (Sony Sports TEN Network) அனைத்துப் போட்டிகளும் நேரடியாக ஒளிபரப்பப்படும். மேலும், சோனி லிவ் (Sony LIV) மற்றும் ஃபேன் கோட் (FanCode) ஓடிடி தளங்களில் நேரடி ஸ்ட்ரீமிங் மூலம் ரசிகர்கள் போட்டிகளைக் கண்டுகளிக்கலாம்.

இந்தியாவுக்கு வெளியே ஆசியக் கோப்பையை எங்கு பார்க்கலாம்?

பாகிஸ்தான்: பிடிவி ஸ்போர்ட்ஸ் (PTV Sports) - ஸ்ட்ரீமிங்: தமாஷா, மைக்கோ
இலங்கை: டென் கிரிக்கெட், டிவி1, சிர்சா டிவி
ஆப்கானிஸ்தான்: லெமர் டிவி
வங்காளதேசம்: டி ஸ்போர்ட்ஸ் - ஸ்ட்ரீமிங்: தமாஷா, மைக்கோ
ஐக்கிய அரபு அமீரகம் & ஓமன்: க்ரிக்லைஃப், க்ரிக்லைஃப் மேக்ஸ் - ஸ்ட்ரீமிங்: ஸ்டார்ஸ்ப்ளே (eLife TV, Switch TV வழியாக)
தென்கிழக்கு ஆசியா: க்ரிக்பஸ்
அமெரிக்கா & கனடா: வில்லோ டிவி

Story first published: Wednesday, September 10, 2025, 7:05 [IST]
Other articles published on Sep 10, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+