Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அபிஷேக் சர்மாவின் தொடர் அதிரடி.. விராட் கோலியின் சாதனைக்கு ஆபத்து.. பைனலில் சாதிப்பாரா?

துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் அபிஷேக் சர்மா, ஹாட்ரிக் அரைசதம் அடித்திருப்பதன் மூலம், விராட் கோலி சாதனையை உடைக்க போகிறார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தை இந்திய அணியின் நட்சத்திர வீரர் அபிஷேக் ஷர்மா 31 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். இதன் மூலம் 8 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும். கில் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தும் அபிஷேக் ஷர்மா அதிரடியாக விளையாடியிருக்கிறார்.

இதன் மூலம் நடப்பு ஆசிய கோப்பை தொடரில் அபிஷேக்சர்மா தொடர்ந்து மூன்று முறை அரைசதம் அடித்திருக்கிறார். இந்த ஒரு போட்டியில் அவர் பல்வேறு சாதனைகளைப் படைத்தது மட்டுமல்லாமல் விராட் கோலியின் யாராலும் தொட முடியாத சாதனையை நெருங்கி இருக்கிறார்.

Abhishek sharma

அபிஷேக் ஷர்மா தற்போது சர்வதேச t20 தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் ஆக இருக்கின்றார். இதற்கு காரணம் ரன்கள் மட்டுமல்லாமல் அதிவேகமாக அதனை அடிக்கின்றார். இன்னும் சொல்லப்போனால் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் வீரர் என்ற பெருமை அவர்தான் பெற்றிருக்கிறார்.

இன்னும் சொல்லப்போனால் கடைசியாக அவர் விளையாடிய 13 இன்னிங்ஸில் எட்டு முறை 200 ஸ்ட்ரைக் ரேட் அவர் ரன்களை குவித்திருக்கின்றார். இப்படி ஒரு சாதனையை இதுவரை எந்த வீரரும் படைத்தது கிடையாது. அது மட்டும் இல்லாமல் நடப்பு தொடரில் ஹாட்ரிக் அரை சதம் அடித்திருப்பது மூலம் அபிஷேக் ஷர்மா மற்றொரு சாதனை படைத்திருக்கிறார்.

அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து மூன்று அரை சதம் அடித்த ஆறாவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார். இதற்கு முன்பு விராட் கோலி, ரோகித் சர்மா, கே எல் ராகுல்,ஸ்ரேயாஸ், சூரியகுமார் யாதவ் ஆகியோர் இத்தகைய சாதனையை படைத்திருக்கிறார்கள். இதேபோன்று விராட் கோலியின் ஒரு சாதனையை யாராலும் தொட முடியாது என்ற நிலை இருந்தது.

தற்போது அதனை அபிஷேக் ஷர்மா உடைக்கப் போகிறார். அதாவது டி20 தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் பட்டியலில் அபிஷேக்சர்மா தற்போது இரண்டாவது இடத்தை பிடித்திருக்கின்றார். முதல் இடத்தில் விராட் கோலி 319 ரன்கள் 2014 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் அடித்திருந்தார். தற்போது அபிஷேக் ஷர்மா 309 ரன்கள் அடித்திருப்பதால் இறுதிப் போட்டியில் வெறும் 11 அடித்தால் கோலியின் மகத்தான சாதனை அவர் பின்னுக்கு தள்ளி விடுவார்.

Story first published: Friday, September 26, 2025, 23:43 [IST]
Other articles published on Sep 26, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+