Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை 2025: இந்திய அணியில் விடுப்பட்ட வீரர்களை வைத்து 16 பேர் அணியை தேர்வு செய்த EX வீரர்

மும்பை: ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில் பல நட்சத்திர வீரர்கள் விடுபட்ட விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய அணி ஐபிஎல் வருகைக்கு பிறகு பல ஸ்டார் வீரர்களை உருவாக்கி இருக்கிறது. இதனால் 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்வது என்பது மிகவும் கடுமையான பணியாக மாறிவிட்டது.

இது குறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்த ஹர்திக் பாண்டியா, இந்திய அணியால் ஒரே நேரத்தில் இரண்டு தொடருக்கான வீரர்களை தேர்வு செய்து விளையாட வைக்க முடியும் என்று கூறினார். அதை உண்மையாக்கும் வகையில், தற்போது ஆகாஷ் சோப்ரா ஒரு அணியை தேர்வு செய்திருக்கிறார்.

Asia cup 2025

அதில் நடப்பு ஆசிய கோப்பை தொடரில் தேர்வு செய்யப்படாத வீரர்களை வைத்து ஒரு 16 பேர் கொண்ட அணியை அவர் அறிவித்திருக்கிறார். அது யார் என்று தற்போது பார்க்கலாம். இது குறித்து பேசி ஆகாஷ் சோப்ரா, நான் என்னுடைய தொடக்க வீரராக ஜெய்ஸ்வாலை தேர்வு செய்கின்றேன்.

அவர் டி20 உலக கோப்பையில் இடம் பெற்றிருந்தால் ஆனால் அவருக்கு ஏன் தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று எனக்கு தெரியவில்லை. இதை போன்று மற்றொரு தொடக்க வீரராக சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாடை தேர்வு செய்வேன். அவர் இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் எல்லாம் அடித்திருந்தார். ஆனால் திடீரென்று அவர் காட்சிகளிலிருந்து மறைந்து விட்டார்.

மூன்றாவது வீரராக நான் கே எல் ராகுலை தேர்வு செய்வேன். அவரால் அணியில் தொடக்க வீரராகவும் விளையாட முடியும். இல்லை என்றால் விக்கெட் கீப்பர் ஆகவும் செயல்பட முடியும். நம்பர் நான்காம் இடத்தில் நான் ஸ்ரேயாஸ் ஐயரை தேர்வு செய்வேன். இதேபோன்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக எனது அணியில் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்படுவார்.

ஆறாவது வீரராக ஆல்ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டியை நான் தேர்ந்தெடுப்பேன். அவர் ஹர்திக் பாண்டியா செய்யும் பணியை நிச்சயம் மேற்கொள்வார். நம்பர் ஏழாவது இடத்தில் ஆல்ரவுண்டர் குர்னல் பாண்டியாவையும், எட்டாவது இடத்தில் வாஷிங்டன் சுந்தரையும் நான் தேர்வு செய்வேன். இவர்கள் இருவரும் எனக்கு சில ஓவர்களை கொடுப்பார்கள். அது மட்டும் இல்லாமல் பேட்டிங் பலத்தையும் அதிகரிப்பார்கள்.

குர்னல் பாண்டியா எவ்வாறு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இதேபோன்று ஒன்பதாம் இடத்தில் நான் ரவி பிஸ்னாயை தேர்வு செய்வேன். பத்தாம் இடத்தில் பிரசித் கிருஷ்ணாவையும், 11-வது இடத்தில் முஹமது சிராஜியும் நான் தேர்வு செய்வேன். அது மட்டுமில்லாமல் சாய் சுதர்சன், துருவ் ஜூரல், ரியான் பராக், சாகல் மற்றும் கலில் அகமதை கூடுதல் வீரர்களாக அணியில் தேர்வு செய்வேன் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

Story first published: Saturday, August 23, 2025, 23:40 [IST]
Other articles published on Aug 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+