Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பைக்கு சிக்கல்.. பிசிசிஐ தந்த வார்னிங்.. ஆரம்பமே இப்படியா? என்ன நடந்தது?

மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்தியா-பாகிஸ்தான் மற்றும் இந்திய-வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு இடையிலான அரசியல் காரணங்கள் காரணமாக இந்த தொடர் தற்போது நடைபெறுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

அடுத்த வருடம் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற இருப்பதால் இம்முறை ஆசிய கோப்பை டி20 வடிவத்தில் நடைபெற இருந்தது. இந்த தொடர் இந்தியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கான அட்டவணை அல்லது எந்தெந்த மைதானங்களில் போட்டி நடைபெறும் என்ற எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Asia cup 2025

இந்த தருணத்தில் ஆசிய கோப்பை தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்த வங்கதேச தலைநகர் டாக்காவில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சம்மேளனத்தின் தலைவரான மோசின் நக்வி ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் தங்களால் டாக்காவுக்கு வர முடியாது என்றும் இந்த ஆலோசனை கூட்டத்தை துபாய்க்கு மாற்றுங்கள் என்றும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலடி கொடுத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோஷின் நக்வி, உங்களால் டாக்காவிற்கு வர முடியவில்லை என்றால், ஜூம் காலில் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார். இது பிசிசிஐக்கு எரிச்சலை ஏற்படுத்திருக்கிறது. இந்த நிலையில் ஆசிய கோப்பை தொடரில் தாங்கள் பங்கேற்க வேண்டும் என்றால் முதலில் ஆலோசனை கூட்டத்தை டாக்காவிலிருந்து மாற்றுங்கள் என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தி இருக்கின்றது.

இதுவரை இது தொடர்பாக மோசின் நக்வி எந்த ஒரு பதிலையும் தரவில்லை. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கும் மோஷன் நக்வி தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தொடர் நடைபெறும் நிலையில் சென்ற முறை இந்த போட்டி பாகிஸ்தானில் நடத்தப்பட்டது.

இந்தியா விளையாடும் போட்டிகள் மற்றும் இலங்கையில் நடந்தது அதை போல் ஒரு திட்டத்தில் மூலம் ஆசிய கோப்பை போட்டிகள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆலோசனை கூட்டத்திற்கு பிசிசிஐ செல்ல மாட்டோம் என கூறியிருப்பது பிரச்சனையை பெரிதுபடுத்திருக்கிறது. ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் நடைபெற இருந்த வங்கதேச தொடர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது செப்டம்பர் மாதமும் ஆசிய கோப்பை போட்டிகள் ரத்து செய்யப்பட்டால் இந்திய அணி இரண்டு மாதங்கள் எந்தவித கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்க முடியாத நிலையில் ஏற்படும்.

Story first published: Saturday, July 19, 2025, 16:55 [IST]
Other articles published on Jul 19, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+