Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Asia Cup 2025: ரிங்கு சிங் சோலியை முடித்த சிவம் துபே.. ஒரே மேட்ச்சில் ஆசிய கோப்பை கனவு முடிவு?

துபாய்: 2025 ஆசியக் கோப்பை தொடரை இந்திய அணி ஒரு அபார வெற்றியுடன் தொடங்கியுள்ளது. ஆனால், இந்த வெற்றி, இந்திய அணியின் நட்சத்திர 'ஃபினிஷர்' ரிங்கு சிங்கிற்கு ஒரு கசப்பான செய்தியைக் கொண்டு வந்துள்ளது. இந்தப் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை (UAE) வெறும் 57 ரன்களுக்கு சுருட்டி, 9 விக்கெட் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது இந்திய அணி. இந்தப் போட்டியில் ஆல்-ரவுண்டர் சிவம் துபேவின் பந்துவீச்சு, ரிங்கு சிங்கின் ஆசியக் கோப்பை பிளேயிங் 11 கனவை கிட்டத்தட்ட முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியில், ரிங்கு சிங்கிற்குப் பதிலாக சிவம் துபேவிற்கு பிளேயிங் 11-ல் வாய்ப்பு வழங்கப்பட்டது. அணியின் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக அவர் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்தார்.

Asia Cup 2025 Is Rinku Singh s Dream Over Shivam Dube s Three-Wicket Haul Seals His Place

இந்தப் போட்டியின் 11-வது ஓவரில் பந்துவீச வந்த சிவம் துபே, தனது 2 ஓவர்களில் வெறும் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி, தனது கிரிக்கெட் வாழ்வின் சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்தார். ஆசிஃப் கான், துருவ் பராஷர் மற்றும் ஜுனைத் சித்திக் ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றி, ஐக்கிய அரபு அமீரக அணிக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார்.

ஒரு அதிரடி பேட்ஸ்மேனாக அறியப்பட்ட சிவம் துபேவின் இந்த அபாரமான பந்துவீச்சு, இந்திய அணி நிர்வாகத்திற்கு அவர் மீது மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது. அவருக்கு ஆசியக் கோப்பை தொடரின் மீதமுள்ள போட்டிகளிலும் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படும் என கூறப்படுகிறது.

ரிங்கு சிங் vs சிவம் துபே: ரேஸில் முந்தியது யார்?

இந்திய அணியின் பிளேயிங் 11-ல் ஆறாவது பந்துவீச்சாளர் இடம் காலியாகவே இருந்தது. அந்த இடத்திற்கு, ரிங்கு சிங்கிற்கும், பகுதி நேர வேகப்பந்து வீச்சாளரான சிவம் துபேவிற்கும் இடையே கடும் போட்டி நிலவியது. ரிங்கு சிங் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளராக செயல்படுவார் என்றாலும் சர்வதேச போட்டிகளில் அதிக அளவில் அவர் பந்து வீசியதில்லை.

ரிங்கு சிங்கின் பலம் மற்றும் பலவீனம்:

ரிங்கு சிங் ஒரு அற்புதமான ஃபினிஷர் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. கடைசி கட்டத்தில் களமிறங்கி போட்டியை வென்று கொடுக்கும் அவரது திறன் அசாத்தியமானது. ஆனால், அவர் ஒரு பகுதி நேர ஆஃப்-ஸ்பின்னர் மட்டுமே. துபாய் போன்ற வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில், அணியில் ஏற்கனவே அக்சர் படேல், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி என மூன்று முக்கிய சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கும்போது, நான்காவதாக ஒரு பகுதி நேர சுழற்பந்து வீச்சாளரின் தேவை மிகவும் குறைவு.

இங்குதான் சிவம் துபே ஒரு ஆல்-ரவுண்டராக ஜொலிக்கிறார். அவரும் ஒரு அதிரடி பேட்ஸ்மேன். சுழற்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்ளும் திறன் கொண்டவர். ஆனால், அவருடன் கூடுதலாக வரும் பகுதி நேர வேகப்பந்து வீச்சுத் திறன்தான், அவரை ரிங்கு சிங்கை விட ஒரு படி மேலே நிறுத்துகிறது. ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்குப் பிறகு, மூன்றாவது வேகப்பந்து வீச்சாளருக்கான இடத்தை அவர் பூர்த்தி செய்வதால், அணிக்கு ஒரு சிறந்த பேலன்ஸ் கிடைக்கிறது.

முடிவுக்கு வந்ததா ரிங்குவின் வாய்ப்பு?

சிவம் துபேவின் இந்த ஒற்றை போட்டியின் செயல்பாடு, அணியில் அவரது இடத்தை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது. பேட்டிங்கில் அதிரடி, பந்துவீச்சில் விக்கெட் என ஒரு முழுமையான ஆல்-ரவுண்டராக அவர் உருவெடுத்துள்ளார். இதனால், வரவிருக்கும் இந்தியா - பாகிஸ்தான் போன்ற முக்கியமான போட்டிகளிலும் சிவம் துபேவே பிளேயிங் 11-ல் தொடர்வார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆக, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான ஒரே ஒரு போட்டி, ரிங்கு சிங்கின் ஆசியக் கோப்பை பிளேயிங் 11 கனவை கேள்விக்குறியாக்கியுள்ளது.

Story first published: Thursday, September 11, 2025, 15:36 [IST]
Other articles published on Sep 11, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+