Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சஞ்சு சாம்சனுக்கு அநியாயம் செய்கிறாரா கம்பீர்? பயிற்சி முகாமில் நடந்த காட்சி.. வாய்ப்பு இல்லையா?

துபாய்: ஆசிய கோப்பை டி20 தொடரில் இந்திய அணியில் தற்போது மிகப்பெரிய ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. டி20 அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு இருந்த சுப்மன் கில், தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் டி20 அணியின் துணை கேப்டனாக திரும்பி இருக்கின்றார்.

கில் தொடக்க வீரராக தான் டி20 போட்டிகளில் களமிறங்குவார் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இதனால் தொடக்க வீரராக இருந்தால் சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் இருக்குமா என்ற கேள்வி எழுந்தது. எனினும் சஞ்சு சாம்சனுக்கு நடுவரிசையில் இடம் தரப்படலாம் என்று கூறப்பட்டது.

Asia Cup 2025

ஆனால் தற்போது நடைபெறும் சம்பவங்களை பார்த்தால் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காது என்றும் ஜித்தேஷ் சர்மா தான் இந்திய அணியின் நடுவரிசையில் விளையாடலாம் என்றும் கூறப்படுகிறது. துபாயில் பயிற்சி முகாமில் இந்திய அணி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் சஞ்சு சாம்சன் பதில் ஜித்தேஷ் சர்மாவுடன் கம்பீர் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். இந்த காட்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. இந்திய அணிக்காக கடைசியாக ஜித்தேஷ் சர்மா 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விளையாடினார். 31 வயதான ஜித்தேஷ் சர்மா இதுவரை 9 t20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஜித்தேஷ் சர்மா 15 போட்டியில் விளையாடி 261 ரன்கள் அடித்து இருந்தார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 176 என்ற அளவிலும், சராசரி 37 என்ற அளவிலும் இருந்தது. ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல ஜித்தேஷ் சர்மாவும் முக்கிய காரணமாக இருந்தார்.

இதனால் ஜித்தேஷ் சர்மாவுக்கு நடு வரிசையில் இடம் கொடுக்க கம்பின் முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது. இதன் காரணமாக சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் இல்லாமல் போகலாம். இதனால் தான் பயிற்சியில் ஜித்தேஷ் ஷர்மாவுக்கு முக்கியத்துவம் வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.இந்திய டி20 அணியில் தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் களம் இறங்கிய பிறகு அவர் அதிரடியாக விளையாடி இருக்கின்றார். 30 வயதான சஞ்சு சாம்சன் தற்போது டி20 கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்திருப்பதன் மூலம் மூன்று சதம் அடித்திருக்கின்றார். இதனால் அவருக்கு தான் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Story first published: Sunday, September 7, 2025, 19:41 [IST]
Other articles published on Sep 7, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+