Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியில் சஞ்சு சாம்சன் வேண்டாம்.. 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷியை சேருங்கள்.. ஸ்ரீகாந்த் கருத்து

சென்னை: ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி நாளை செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட உள்ள நிலையில், இந்திய அணியில் தொடக்க வீரராக யார் களம் இறங்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட சுப்மன் கில் மற்றும் ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடிய சாய் சுதர்சனுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அது மட்டும் இல்லாமல் அதிரடி வீரர் ஜெய்ஸ்வாலையும் இந்தியா டி20 அணியின் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் அபிஷேக் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஏற்கனவே நன்றாக விளையாடி வருவதால் இந்த காம்பினேஷனை மாற்ற கம்பீர் விரும்பவில்லை.இந்த நிலையில் முன்னாள் இந்திய அணி கேப்டன் ஸ்ரீகாந்த் ஆசிய கோப்பை தொடரில் தொடக்க வீரராக சந்து சாம்சனை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Kris srikanth on sanju samson

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் சஞ்சு சாம்சனுக்கு ஷார்ட் பால்களை எதிர்கொள்ள பிரச்சனை இருக்கின்றது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் கூட அவர் தடுமாறினார். என்னை பொறுத்தவரையில் அவர் தொடக்க வீரராக களம் இறங்கினால், நிச்சயம் எதிரணி இந்த ஆயுதத்தை அவர்களுக்கு எதிராக பயன்படுத்தும்.

இதுவே நான் தேர்வுக் குழுத் தலைவராக இருந்தால் அபிஷேக் ஷர்மாவை தொடர்ந்து எனது நம்பர் ஒன் வீரராக பயன்படுத்துவேன். மற்றொரு தொடக்க வீரராக தமிழக வீரர் சாய் சுதர்சன் இல்லையென்றால் 14 வயது வீரரான வைபவ் சூரியவன்ஷியை தேர்வு செய்வேன். வைபவ் சூரியவன்சியை என்னுடைய டி20 உலக கோப்பை அணியில் நிச்சயம் நான் தேர்வு செய்வேன்.

அவர் அபாரமாக விளையாடி வருகிறார். சாய் சுதர்சன் பொருத்தவரையில் அவர் ஐபிஎல் தொடரில் கடந்த சீசனில் அதிக ரன்கள் அடித்து இருக்கின்றார். ஜெய்ஸ்வாலும் நன்றாக விளையாடி வருகிறார். எனவே சாய் சுதர்சன் சூர்யவன்ஷி அல்லது ஜெய்ஸ்வால் இந்த மூன்று பேர்களில் ஒருவர் தான் அபிஷேக் ஷர்மாவுடன் விளையாட வேண்டும்.

அதுதான் என்னுடைய விருப்பமாக இருக்கும். தற்போது உலகம் மிகவும் கடும் சவாலான இடமாக மாறி வருவதையே இது காட்டுகிறது. இதேபோன்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சஞ்சு சாம்சன் அல்லது ஜித்தேஷ் சர்மா என இரண்டு பேரில் ஒருவரை சேர்க்க வேண்டும். அது மட்டும் அல்லாமல் ஸ்ரேயாஸ், ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல் போன்றோரையும் இந்திய அணியில் சேர்க்கலாம் என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

Story first published: Monday, August 18, 2025, 9:33 [IST]
Other articles published on Aug 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+