துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது டி20 வடிவத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. இதில் இந்திய அணியில் நட்சத்திர வீரர் அபிஷேக் ஷர்மா அதிகபட்சமாக 173 ரன்கள் அடித்து அசத்தி இருக்கின்றார். இந்த நிலையில் டி20 கிரிக்கெட்டில் எத்தனை ரன்கள் அடித்திருக்கிறோம் என்பதை விட எவ்வளவு வேகமாக எவ்வளவு ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறோம் என்பதுதான் முக்கியம்.
இதனால்தான் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் உள்ளிட்ட வீரர்கள் எல்லாம் ஆசிய கோப்பை டி20 தொடரில் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் வீரர்கள் யார் என்று தற்போது பார்க்கலாம்.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா இருக்கின்றார். இவர் 197 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கின்றார். இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து வீரர் பில் சால்ட் உள்ளார். அவர் 169 ஸ்ட்ரைக் ரைட்டை வைத்திருக்கிறார். மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் டிம் டேவிட் இருக்கின்றார். அவர் 168 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கின்றார்.
நான்காவது இடத்தில் சூரியகுமார் யாதவ் இருக்கின்றார். அவர் 166 ஸ்ட்ரைக் ரைட்டை வைத்திருக்கின்றார். ஐந்தாவது இடத்தில் ஜோஸ் இங்கிலீஷ் இருகின்றார். அவர் 164.41 ஆறாவது இடத்தில் மற்றொரு இந்திய வீரரான ஜெய்ஸ்வால் இருக்கின்றார். அவர் 164 புள்ளி 3 ஒன்னு ஸ்ட்ரைக் ரைட்டை வைத்திருக்கிறார். ஏழாம் இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்டிரூ ரசூல் இருக்கின்றார். அவர் 163.79 ஸ்ட்ரைக் ரேட் இருக்கின்றார்.
எட்டாவது இடத்தில் பின் ஆலன் இருக்கின்றார். அவர் 163.27 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கின்றார். ஒன்பதாவது இடத்தில் இந்திய வீரர் இருக்கின்றார். இதில் அவர் 161 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கின்றார். பத்தாவது இடத்தில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கேமரன் கிரீன் இருக்கிறார். அவர் 160.32 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். முதல் 10 இடத்தில் இந்திய வீரர்கள் நான்கு பேர் உள்ளனர். இதில் ஜெய்ஸ்வால் மற்றும் ரிங்கு சிங் ஆகியோருக்கு டி20 அணியில் போதிய வாய்ப்பு கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.