Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வங்கதேச அணியில் உச்சத்தில் அரசியல்.. ஒருநாள் கேப்டனுக்கு ஆசிய கோப்பையில் இடமில்லை

டாக்கா: செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பைக்கான 16 பேர் கொண்ட அணியை வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இந்த டி20 வடிவிலான தொடரை ஐக்கிய அரபு அமீரகம் நடத்தவுள்ளது. இதில் எட்டு அணிகள் பங்கேற்கின்றன. வங்கதேச தேர்வுக்குழு, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் நூருல் ஹாசன் மற்றும் ஆல்-ரவுண்டர் சைஃப் ஹாசனை அணிக்கு மீண்டும் அழைத்துள்ளது.

ஆனால், கடந்த மாதம் டாக்காவில் பாகிஸ்தானை 2-1 என்ற கணக்கில் வீழ்த்திய பங்களாதேஷ் அணியில் இடம்பெற்றிருந்த அனுபவ ஆல்-ரவுண்டர் மெஹிதி ஹாசன் மிராஸ் மற்றும் முன்னணி பேட்ஸ்மேன் முகமது நயிம் ஆகியோருக்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை.

Asia cup 2025

இதே 16 பேர் கொண்ட அணி, ஆகஸ்ட் 30 முதல் நெதர்லாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடும். மெஹிதி ஹாசன் தனிப்பட்ட காரணங்களால் நெதர்லாந்து தொடரில் பங்கேற்க முடியாத நிலையில், ஆசிய கோப்பையிலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. நூருல் ஹாசனின் கடைசி டி20 போட்டி 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக் கோப்பையில் இருந்தது. அப்போது அவர் ஐந்து இன்னிங்ஸ்களில் 41 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

31 வயதான இவர், 2024-25 சீசனில் பங்களாதேஷ் பிரீமியர் லீக், தேசிய கிரிக்கெட் லீக் மற்றும் குளோபல் சூப்பர் லீக் ஆகியவற்றில் 513 ரன்களை 132.90 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் குவித்து சிறப்பாக விளையாடினார். குல்னாவைச் சேர்ந்த நூருல், கடந்த ஆண்டு ரங்க்பூர் ரைடர்ஸ் அணியை முதல் ஜிஎஸ்எல் பட்டத்துக்கு வழிநடத்தினார்.

லிட்டன் தாஸ், குறுகிய வடிவ கிரிக்கெட்டில் பங்களாதேஷ் அணியின் கேப்டனாக தொடர்கிறார். இதற்கிடையில், பந்துவீச்சு வரிசையில் முஸ்தஃபிசுர் ரஹ்மான், தஸ்கின் அகமது மற்றும் ஷோரிஃபுல் இஸ்லாம் ஆகிய அனுபவமிக்க மூவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பேட்டிங் வரிசையில் ஜாக்கர் அலி மீது அனைவரது கவனமும் இருக்கும், ஏனெனில் அவர் சமீபத்தில் அபாரமான ஃபார்மில் உள்ளார்.

பங்களாதேஷ் அணி ஆசியக் கோப்பையில் பி பிரிவில் இடம்பெற்றுள்ளது. அவர்கள் தங்கள் பயணத்தை செப்டம்பர் 11 அன்று அபுதாபியில் ஹாங்காங் அணிக்கு எதிராகத் தொடங்குவார்கள். அடுத்த இரண்டு போட்டிகளில், செப்டம்பர் 13 அகவும் செப்டம்பர் 16 அன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும் அதே மைதானத்தில் விளையாடுவார்கள்.

பங்களாதேஷ் அணி (ஆசிய கோப்பை மற்றும் நெதர்லாந்து டி20 தொடர்): லிட்டன் தாஸ் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தன்ஜித் ஹாசன், பர்வேஸ் ஹொசைன் எமோன், சைஃப் ஹாசன், தவ்ஹித் ஹிரிடோய், ஜாக்கர் அலி, ஷமிம் ஹொசைன், நூருல் ஹாசன், மஹேதி ஹாசன், ரிஷாத் ஹொசைன், நசும் அகமது, முஸ்தஃபிசுர் ரஹ்மான், தன்ஜிம் ஹாசன், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், முகமது சைஃபுதின்.

Story first published: Friday, August 22, 2025, 23:33 [IST]
Other articles published on Aug 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+