Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK: இந்தியாவின் ஆசிய கோப்பையை களவாடிய நக்விக்கு தங்கப் பதக்கம்.. திருந்தாத பாகிஸ்தான்

துபாய்: 2025 ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு, கோப்பையை இந்திய அணிக்கு வழங்காமல் மைதானத்தை விட்டு வெளியேறி, பெரும் சர்ச்சையின் மையப் புள்ளியாக மாறிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்விக்கு, பாகிஸ்தானில் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது கிரிக்கெட் உலகில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணிக்கு எதிரான தனது "உறுதியான மற்றும் தைரியமான நிலைப்பாட்டிற்காக" அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வியின் கைகளில் இருந்து கோப்பையைப் பெற இந்திய வீரர்கள் மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த நக்வி, கோப்பையுடனும், பதக்கங்களுடனும் மைதானத்தை விட்டு வெளியேறினார். இந்தச் சம்பவம் இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

Asia Cup 2025 Mohsin Naqvi to Receive Highest Honour in Pakistan for refusing Asia Cup to India

இந்த நிலையில், மோஷின் நக்வியின் இந்தச் செயலைப் பாராட்டி, அவருக்கு 'ஷஹீத் சுல்பிக்கார் அலி பூட்டோ சிறப்பு தங்கப் பதக்கம்' (Shaheed Zulfiqar Ali Bhutto Excellence Gold Medal) என்ற உயரிய விருதை வழங்க சிந்து மற்றும் கராச்சி கூடைப்பந்து சங்கங்கள் முடிவு செய்துள்ளன. பாகிஸ்தானின் தேசியப் பெருமை, தலைமைப் பண்பு மற்றும் கொள்கைகளில் அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் தனிநபர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

இந்த விருது வழங்கும் விழா கராச்சியில் நடைபெறவுள்ளதாகவும், இதன் சிறப்பு விருந்தினராக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி அழைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது அறிவிப்பு, கோப்பை சர்ச்சைக்குப் புதிய பரிமாணத்தை அளித்துள்ளது. ஒருபுறம், விளையாட்டு நாகரிகத்திற்கு எதிராக மோஷின் நக்வி நடந்துகொண்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், மறுபுறம் பாகிஸ்தானில் அவர் ஒரு ஹீரோவாகக் கொண்டாடப்படுகிறார்.

மன்னிப்பு கேட்க மறுத்த நக்வி

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் (பிசிசிஐ) மோஷின் நக்வி மன்னிப்பு கேட்டதாகச் சில செய்திகள் வெளியாகின. ஆனால், இதை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். "நான் யாரிடமும் மன்னிப்புக் கேட்கவில்லை, கேட்கப் போவதும் இல்லை," என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்திய அணிக்குக் கோப்பையைக் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால், அவர்கள் துபாயில் உள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்திற்கு அதிகாரப்பூர்வமாக வந்து அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தனது நிபந்தனையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஆக, கோப்பை சர்ச்சை இன்னும் முடிவுக்கு வராத நிலையில், பாகிஸ்தானில் நக்விக்கு வழங்கப்படும் இந்த விருது, இந்த விவகாரத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

Story first published: Friday, October 3, 2025, 15:59 [IST]
Other articles published on Oct 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+