துபாய்: ஆசிய கோப்பை 2025 ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி முதல் இடத்தில் உள்ள நிலையில் இலங்கையை வீழ்த்தி வங்கதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்த தருணத்தில் செவ்வாய்க்கிழமை அன்று இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முக்கிய ஆட்டம் நடைபெறுகிறது. இதில் தோல்வி அடையும்படி அணி தொடரை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்படும். இந்த நிலையில் நடப்பு ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

இந்த பட்டியலில் இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா முதலிடத்தில் இருக்கின்றார். பாகிஸ்தானுக்கு எதிராக 74 ரன்கள் அடித்து இந்த நிலையில் அவர் இந்த தொடரில் ஒட்டுமொத்தமாக 173 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 43 அளவிலும் உள்ளது. இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் இலங்கை வீரர் நிசாங்கா இருக்கின்றார். அவர் நான்கு போட்டிகளில் விளையாடி 146 ரன்கள் அடித்து இருக்கின்றார்.
இதில் இரண்டு அரை சதம் அடங்கும். மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் தொடக்க வீரர் ஃபர்கான் இருக்கின்றார். அவர் நான்கு போட்டிகளில் விளையாடி 132 ரன்கள் அடித்திருக்கிறார். வங்கதேச வீரர் தவ்ஹீத் ஹிர்தாய் 127 ரன்களும், இலங்கை வீரர் குசல் மெண்டீஸ் 122 ரன்களும் அடித்து ஐந்தாவது இடத்தில் உள்ளனர்.
இதை போன்று அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் குல்தீப் யாதவ் நான்கு போட்டியில் விளையாடி ஒன்பது விக்கெட்டுகளுடனும், யுஏஇ வீரர் சித்திக் மூன்று போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளுடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளனர். இரண்டாவது இடத்தில் வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் 7 விக்கெட்டுகளுடன் 2வது இடத்திலும் உள்ளனர்.
மூன்றாவது இடத்தில் இலங்கை வீரர் துஷாரா மற்றும் பாகிஸ்தான் வீரர் ஷையும் அயூப் ஆகியோர் விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். நான்காம் இடத்தில் இந்திய வீரர் சிவம் துபே, இலங்கை வீரர் ஹசரங்கா, சமீரா ஆகியோர் தலா ஐந்து விக்கெட் உடன் உள்ளனர்.