Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை 2025.. அதிக ரன்கள், அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியல்

துபாய்: ஆசிய கோப்பை 2025 ஆம் ஆண்டு தொடரில் இந்திய அணி ஒன்பதாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்திருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணி ஒரே ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவாமல் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. இப்படி இந்தியா ஆசிய கோப்பையை ஒரு போட்டியில் கூட தோற்காமல் வென்றது மூன்றாவது முறையாகும்.

இந்த நிலையில் ரசிகர்களுக்கு கடந்த ஒரு வாரத்திற்கு மேல் விருந்து படைத்த இந்த தொடரில் அதிக ரன்கள், அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் யார் என்ற பட்டியலை தற்போது பார்க்கலாம். இந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரராக அபிஷேக் ஷர்மா இருக்கிறார்.

Asia cup 2025

தொடக்க வீரரான அவர் 314 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய ஸ்டிரைக் ரேட் 200 என்ற அளவில் உள்ளது. இந்த தொடரில் அதிகபட்சமாக அவர் 19 சிக்ஸர்களை அடித்துள்ளார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இலங்கை வீரர் நிசாங்கா இருக்கின்றார். அவர் ஆறு போட்டியில் விளையாடி 261 ரன்கள் அடித்துள்ளார். இந்த தொடரில் சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றிருக்கிறார்.

இதேபோன்று பாகிஸ்தான் வீரர் ஃபர்கான் மூன்றாவது இடத்தில் உள்ளார். அவர் 7 போட்டிகளில் விளையாடி 217 ரன்கள் அடித்துள்ளார். நான்காவது இடத்தில் இந்தியாவின் திலக் வர்மா இருக்கின்றார். இவர் 7 போட்டிகளில் விளையாடி 213 ரன்கள் அடித்துள்ளார். ஐந்தாம் இடத்தில் பாகிஸ்தான் வீரர் பக்கர் சமான் உள்ளார். இவர் 7 போட்டியில் விளையாடி 181 ரன்கள் அடித்துள்ளார்.

இதுபோன்று பவுலர்களுக்கான பட்டியலில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக குல்திப் யாதவ் இருக்கின்றார்.இவர் 7 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இதன்மூலம் ஆசிய கோப்பை வரலாற்றில் ஒரே தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமை கிடைத்திருக்கிறது. இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் வீரர் ஷாகின் அப்ரிடி இருக்கின்றார். அவர் 7 போட்டியில் விளையாடி 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

மூன்றாவது இடத்தில் மூன்று பேர் பகிர்ந்து இருக்கிறார்கள். யுஏஇ வீரர் ஜுனைத் சித்திக், பங்களாதேஷ் வீரர் ரஹ்மான், பாகிஸ்தான் வீரர் ஹரிஷ் ரவுப் ஆகியோர் தலா ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாம் இடத்தை பகிர்ந்து இருக்கிறார்கள். இதேபோன்று நான்காவது இடத்தில் நான்கு வீரர்கள் உள்ளனர். பாகிஸ்தான் வீரர் ஷையும் அயூப், இலங்கை வீரர் ஹசரங்கா, வங்கதேச வீரர் ரிசாத் ஹுசைன், டஸ்கின அஹமத் ஐயோ தலா எட்டு விக்கெட்டுகளை பிடித்து உள்ளனர். ஐந்தாவது இடத்தில் மூன்று வீரர்கள் பகிர்ந்துள்ளனர். இந்திய வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, பும்ரா மற்றும் இலங்கை வீரர் சமீரா ஆகியோர் தலா 7 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர்.

Story first published: Monday, September 29, 2025, 12:42 [IST]
Other articles published on Sep 29, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+