Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Asia cup: மீசையில் மண் ஓட்டவில்லை.. கோரிக்கை நிறைவேறாமல் போட்டியில் விளையாடியது ஏன்.. பாகிஸ்தான் விளக்கம்

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிகப்பெரிய ஒரு அவமானத்தை சந்தித்த நிலையில் தற்போது தங்களது மீசையில் மண் ஒட்டவில்லை என்று ஒரு விளக்கம் அளித்துள்ளது. அதாவது கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் யாரும் பாகிஸ்தான் வீரர்களுக்கு கை கொடுக்கவில்லை.

மேலும் இந்த ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், கேப்டன் சூரியகுமார் யாதவ், பஹல்காம் தாக்குதல் குறித்தும் இந்திய ராணுவம் குறித்தும் புகழ்ந்து பேசினார்.இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

PCB

இதையெல்லாம் திசை திருப்புவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரு நாடகத்தை நடத்தியது. அதில் இருநாட்டு வீரர்களும் கைகுலுக்க கூடாது என கூறிய போட்டி நடுவர் ஆண்டி பயகிராஃப்ட் நீக்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் போர் கொடி தூக்கியது.
ஒருவரை அவர் தொடர்ந்தால் தாங்கள் ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலக நேரிடும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது.

ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த கோரிக்கையை ஐசிசி நிராகரித்துவிட்டது. இதனை அடுத்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஒரு மணி நேரத்திற்கு பின் போட்டி தொடங்கியது. பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்த ஐசிசி, போட்டி நடுவராக ஆண்டி பயகிராஃப்டை நியமித்தது தங்கள் நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு ஏற்பட்ட அவமானத்தை தொடைக்கும் விதமாக ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளது.

அதன்படி இரு நாட்டு வீரர்களும் கைகுலுக்க கூடாது என கூறியதற்காக போட்டி நடுவர் ஆண்டி பைகிராப்ட் பாகிஸ்தான் வீரர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். விளையாட்டில் அரசியலை கலக்கக்கூடாது என்பதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெளிவாக இருக்கின்றது. இந்த செயலை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் போட்டி நடுவர் மன்னிப்பு கேட்டதை எடுத்து இந்த போட்டியில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முடிவெடுத்துள்ளது என்று கூறியுள்ளது.

இதனை குறிப்பிட்டுள்ள ரசிகர்கள் பாகிஸ்தானின் கோரிக்கை ஏற்கப்படாத நிலையில் அந்த அணி அவமானப்பட்டு இருக்கிறது. தற்போது அந்த அவமானத்தை துடைக்கும் விதமாக மீசையில் மண் ஒட்டவில்லை என்று இப்படி ஒரு அறிக்கை பாகிஸ்தான் வெளியிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஒருவேளை இந்த தொடரில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வரையும் விலகி இருந்தால் சுமார் 250 கோடி ரூபாய் அந்த நாட்டு வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, September 17, 2025, 23:11 [IST]
Other articles published on Sep 17, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+