Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தான் அணியிலிருந்து பாபர் அசாம் நீக்கப்பட்டது ஏன்? ஆஸ்திரேலியாவுக்கு செல்ல பயிற்சியாளர் அறிவுறுத்தல்

லாகூர்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டிருப்பது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

30 வயதான பாபர் அசாம் கடந்த ஆண்டு இறுதியில் இருந்து எந்த வித டி20 போட்டிகளிலும் விளையாடாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் பாபர் அசாம், எதற்காக நீக்கப்பட்டார். அவர் அணியில் மீண்டும் வர என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன மைக் ஹேசன் அறிவுரை ஒன்றை வழங்கியிருக்கிறார்.

Babar azam

இது குறித்து பேசிய அவர், பாபர் அசாம் நல்ல வீரர் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவருடைய பேட்டிங்கில் சில விஷயத்தில் அவர் மாற்றிக்கொள்ள வேண்டும். சில விஷயங்களில் அவர் முன்னேற்றம் அடைய வேண்டும். குறிப்பாக சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவருடைய பேட்டிங் தடுமாற்றத்தை காண்கிறது.

டி20 கிரிக்கெட்டில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் மிகவும் குறைவாக இருக்கின்றது. இந்த விஷயத்தில் பாபர் அசாம் கடுமையாக பயிற்சி எடுக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். அதையும் அவர் செய்து வருகின்றார். தற்போது பாபர் அசாம் போன்ற வீரர் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஸ் லீக் தொடரில் பங்கு பெற்று அங்கு விளையாட வேண்டும்.

இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அவர் முன்னேற்றம் அடைவார் என்று நான் நம்புகிறேன். தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் அணியில் பலரும் சிறப்பாக செயல்பட்டு இருப்பதால்தான் அணியில் இடம் கிடைத்து இருக்கின்றது. குறிப்பாக ஃபர்கான் கடைசியாக விளையாடிய 6 போட்டிகளில் மூன்று போட்டிகளில் ஆட்ட நாயகன் விருதை வாங்கி இருக்கின்றார்.

டி20 கிரிக்கெட்டில் வெற்றி பெற வேண்டும் என்றால் ரன் ரேட் என்பது மிகவும் முக்கியம் நாம் பேட்டிங் செய்து ஒரு நல்ல இலக்கை நிர்ணயிக்க வேண்டும். அப்போதுதான்போட்டியில் வெற்றி பெற முடியும் என்று பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹேசன் கூறியுள்ளார். பாகிஸ்தான அணி தங்களுடைய முதல் போட்டியில் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி ஓமன் அணியையும், செப்டம்பர் 14ஆம் தேதி இந்திய அணியையும் எதிர்கொள்ள உள்ளது.

Story first published: Monday, August 18, 2025, 14:50 [IST]
Other articles published on Aug 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+