Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Asia Cup: “2 போட்டியிலும் இந்தியாவை ஜெயிப்போம்" பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவுஃப் மமதை பேச்சு

கராச்சி: 2025 ஆசியக் கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில், கிரிக்கெட் உலகின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய போட்டியான இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்கான எதிர்பார்ப்பு இப்போதே எகிறத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ராஃப், ஆசியக் கோப்பையில் இந்தியாவை இரண்டு முறையும் வீழ்த்துவோம் என்று வாய் சவடால் விட்டுள்ளார்.

ஆசியக் கோப்பை தொடரின் 'ஏ' பிரிவில் இந்தியாவும் பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளன. இரு அணிகளும் செப்டம்பர் 14 அன்று மோதவுள்ளன. மேலும், இரு அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெறும் பட்சத்தில், மீண்டும் ஒருமுறை மோதும் வாய்ப்பு உள்ளது.

Asia Cup 2025 Pakistan player Haris Rauf fires huge warning to India ahead of Asia Cup blockbuster

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், ரசிகர் ஒருவர் ஹரிஸ் ராஃபிடம் இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்துக் கேட்கிறார். அதற்கு ராஃப், சற்றும் யோசிக்காமல், "இரண்டு போட்டிகளிலும் வெல்வோம், இறைவன் அருளால்" என்று நம்பிக்கையுடன் பதிலளிக்கிறார்.

ஹரிஸ் ராஃப் இவ்வாறு நம்பிக்கையுடன் பேசியிருந்தாலும், கள நிலவரம் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. சமீபத்தில், பாகிஸ்தான் அணி பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரைக் கூட இழந்து, மோசமான ஃபார்மில் தடுமாறி வருகிறது.

மறுபுறம், இந்திய அணி தனது முழு பலத்துடன், அனுபவம் மற்றும் இளம் வீரர்கள் கலந்த ஒரு வலுவான அணியை ஆசியக் கோப்பைக்கு அறிவித்துள்ளது. காகிதத்திலும் சரி, சமீபத்திய ஃபார்மிலும் சரி, பாகிஸ்தானை விட இந்திய அணி பல மடங்கு வலுவானதாகவே கருதப்படுகிறது. எனவே, பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்த வேண்டுமென்றால், ஒரு அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே அது சாத்தியம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சமீப ஆண்டுகளாக இந்தியா-பாகிஸ்தான் வீரர்கள் களத்தில் நட்புறவுடன் பழகி வந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் அரசியல் பதற்றம் காரணமாக, இந்த ஆசியக் கோப்பை மோதல் வீரர்களுக்கு ஒருவித தர்மசங்கடமான சூழலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லைப் பதற்றங்கள் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மிகவும் மோசமடைந்துள்ளது. இந்தச் சூழலில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி, வெறும் விளையாட்டாக மட்டும் பார்க்கப்படாமல், இரு நாட்டு கௌரவப் பிரச்சினையாகவும் பார்க்கப்படும் என்பதால், வீரர்கள் மீது தீவிர அழுத்தம் இருக்கும்.

Story first published: Monday, August 25, 2025, 11:11 [IST]
Other articles published on Aug 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+