For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Asia Cup: வரலாற்றிலேயே மோசமான இந்தியா - பாகிஸ்தான் மேட்ச்.. பப்புவா நியூ கினியா போல ஆடிய பாக்.

துபாய்: இந்தியா - பாகிஸ்தான் மோதிய 2025 ஆசிய கோப்பை போட்டி, களத்தில் ஒரு மிகச் சாதாரணப் போட்டியாக, படுமோசமான ஒருதலைப்பட்ச ஆட்டமாக முடிந்து, ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. 'புறக்கணிப்பு' போராட்டங்கள், அரசியல் பதற்றங்கள், தேசிய கீத சர்ச்சை என போட்டிக்கு முன்பாகவே உச்சக்கட்ட பரபரப்பை எட்டிய இந்தப் போட்டி பெரிய சுவாரசியம் இன்றி முடிந்தது.

சமீப கால வரலாற்றில், இவ்வளவு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஒரு தரமான போட்டியின் சுவடே இல்லாமல் நடந்த மிக மோசமான இந்தியா-பாகிஸ்தான் போட்டி இதுவாகத்தான் இருக்கும்.

Asia Cup 2025 Pakistan Plays Like Papua New Guinea The Worst India-Pakistan Match in History

பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சரண்டரான பாகிஸ்தான்:

இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே இந்திய அணிக்கு எந்தவிதமான போட்டியையும் அளிக்கவில்லை. ஒரு முழு உறுப்பினர் அணியைப் போல இல்லாமல், ஒரு வளர்ந்து வரும் அணியைப் போலவே அவர்களின் ஆட்டம் இருந்தது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த பாகிஸ்தானுக்கு, ஹர்திக் பாண்டியா முதல் பந்திலேயே அதிர்ச்சி கொடுத்தார். அதன்பிறகு பும்ரா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் என அனைவரும் பாகிஸ்தான் பேட்டிங் வரிசையை சீட்டுக்கட்டுப் போலச் சரித்தனர். அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோரே, சாஹிப்சாதா ஃபர்ஹான் அடித்த 40 ரன்கள்தான். ஆனால், அதற்காக அவர் 44 பந்துகளை எடுத்துக்கொண்டார் (ஸ்ட்ரைக் ரேட் 90.91). இது டி20 போட்டிக்குச் சற்றும் பொருந்தாத ஆட்டம்.

கேப்டன் சல்மான் அகா (3), முகமது ஹாரிஸ் (3), ஹசன் நவாஸ் (5), முகமது நவாஸ் (0) என முக்கிய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இந்திய சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ் (4 ஓவர்களில் 18 ரன்களுக்கு 3 விக்கெட்) மற்றும் அக்சர் படேல் (4 ஓவர்களில் 18 ரன்களுக்கு 2 விக்கெட்) ஆகியோர் பாகிஸ்தானின் மிடில் ஆர்டரை முற்றிலுமாகச் சிதைத்தனர். இறுதியாக, 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஊதித் தள்ளிய இந்திய பேட்ஸ்மேன்கள்:

128 ரன்கள் என்ற மிக எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, தொடக்கத்திலேயே சுப்மன் கில் (10) ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் ஷர்மா வெறும் 13 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 31 ரன்கள் விளாசி, போட்டியின் போக்கை பவர்பிளேயிலேயே முடித்து வைத்தார்.

அதன்பிறகு, கேப்டன் சூர்யகுமார் யாதவ் (37 பந்துகளில் 47* ரன்கள்) பொறுப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். பாகிஸ்தானின் முன்னணி பந்துவீச்சாளர்களான ஷஹீன் அஃப்ரிடி, முகமது நவாஸ் ஆகியோரால் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. இந்திய அணி 15.5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 131 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஏமாற்றமே மிஞ்சியது ஏன்?

இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்பது எப்போதுமே அதன் முடிவை விட, போட்டி நடைபெறும் விதத்திற்காகவே ரசிக்கப்படும். கடைசி ஓவர் வரை நீடிக்கும் த்ரில், இரு அணி வீரர்களின் திறமையை சோதிக்கும் தருணங்கள் என பல அம்சங்கள் நிறைந்ததுதான் அதன் சிறப்பு. ஆனால், இந்த முறை போட்டிக்கு முன்பாக இருந்த நெகட்டிவ் 'ஹைப்' மட்டுமே மிஞ்சியது. களத்தில், பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு எந்த வகையிலும் ஈடுகொடுக்கவில்லை. இது ஒரு பயிற்சிப் போட்டி போல மிக எளிதாக முடிந்துவிட்டது, கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது.

Story first published: Monday, September 15, 2025, 5:40 [IST]
Other articles published on Sep 15, 2025
English summary
Asia Cup 2025: Pakistan Plays Like Papua New Guinea! The Worst India-Pakistan Match in History!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+