Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தான் அணி அறிவிப்பு.. பாபர் அசாம், முகமது ரிஸ்வான் அதிரடி நீக்கம்

லாகூர்: ஆசிய கோப்பை 2025 ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் தொடங்கி 27 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரக நாட்டில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட எட்டு அணிகள் பங்கேற்கிறது.

இந்த நிலையில் 17 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்து இருக்கிறது. இதில் அந்த அணியின் நட்சத்திர வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்கள்.

Pakistan squad asia cup 2025

பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக சல்மான் அலி ஆகா அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதேபோன்று அனுபவ வீரர் பக்கர் சமான், ஷாஹீன் அப்ரிடி, ஹரிஷ் ரவுப், ஹசன் அலி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்திருக்கின்றனர். இதேபோன்று இளம் நட்சத்திரங்களான ஷயிம் அயூப், ஹசன் நவாஸ், முகமது ஹாரிஸ் உள்ளிட்ட வீரர்களுக்கும் ஆசிய கோப்பை அணியில் இடம் கிடைத்திருக்கின்றது.

இதன் மூலம் பாபர் அசாம், கடந்த எட்டு ஆண்டுகளில் முதல் முறையாக ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடாமல் நீக்கப்படுகிறார். ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் குரூப் ஏ வில் உள்ளது. இவர்களை தவிர ஓமன் மற்றும் யுஏஇ அணிகள் இந்த பிரிவில் இடம் பிடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்தியா, பாகிஸ்தான் போட்டிகள் செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது.

இந்த தொடருக்கு தயாராகும் விதமாக பாகிஸ்தான் அணி வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரக நாட்டுக்கு சென்று முத்தரப்பு தொடர் ஒன்றில் விளையாடுகிறது.
இதில் ஆப்கானிஸ்தான் மற்றும் யுஏஇ அணிகள் சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் உடன் மோதுகின்றனர். பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் டி20 கிரிக்கெட்டுக்கு ஏற்ற வகையில் விளையாடுவதில்லை.

அவர்களுடைய ஸ்ட்ரைக் ரேட் மிகவும் குறைவாக இருக்கிறது என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தற்போது இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக இரண்டு ஸ்டார் வீரர்களையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை ஆசிய கோப்பை தொடர் ஐம்பது ஓவர் போட்டிகளாக நடைபெற்ற நிலையில் பாகிஸ்தான அணி இறுதிப் போட்டிக்கு கூட வரவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

பாகிஸ்தான் அணி விவரம்: சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது, ஃபஹீம் அஷ்ரப், ஃபகர் ஜமான், ஹாரிஸ் ரவூப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலத், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், முகமது வசீம் ஜூனியர், சாஹிப்ஜாதா ஃபர்ஹான், சயிம் ஆயூப், சல்மான் மிர்ஸா, ஷாஹீன் ஷா அஃப்ரிடி மற்றும் சுஃபியான் முகீம்

Story first published: Sunday, August 17, 2025, 13:28 [IST]
Other articles published on Aug 17, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+