இந்தியா நீக்கிய வீரர்களே, பாகிஸ்தான் மெயின் அணிக்கு சவால் அளிப்பார்கள்.. பாகிஸ்தான் குறித்து பாசித் அலி விமர்சனம்
மும்பை: இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட வீரர்களே பாகிஸ்தான் மெயின் அணியின் பலத்திற்கு இருப்பதாக அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாசித் அலி தெரிவித்திருக்கிறார். ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அண்மையின் அறிவிக்கப்பட்டது.
இதில் ஸ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால், சிராஜ், சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர், முகமது சமி உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 2025 ipl சீசனில் 17 போட்டியில் விளையாடியுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் 604 ரன்கள் அடித்து இருந்தார்.

இவ்வளவு சிறப்பாக செயல்படும் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றும் ஆசிய கோப்பை இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடம் தரப்படவில்லை. அதே சமயம் சுப்மன் கில்லுக்கு இந்திய டி20 அணியின் துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று ஜெய்ஸ்வால் கடந்த ஐபிஎல் தொடரில் 559 ரன்கள் அடித்திருந்தார்.
அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 160 என்ற அளவில் இருந்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பாசித் அலி, இந்திய அணியை எடுத்துக் கொள்ளுங்கள் ஸ்ரேயாஸ், ஜெய்ஸ்வால், சிராஜ், ஷமி போன்ற நட்சத்திர வீரர்களுக்கு இடம் இல்லை. அணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த வீரர்கள் எல்லாம் தற்போது பாகிஸ்தானின் உள்ள மெயின் அணியில் உள்ள வீரர்களுக்கு சரிசமமானவர்கள்.
அப்படி என்றால் இந்திய அணி எவ்வாறு பலமாக இருக்கிறது என்று பார்த்துக் கொள்ளுங்கள். ஸ்ரேயாஸ் போன்ற ஒரு ஸ்டார் வீரர் அணியில் இடம் பெறாதது உண்மையிலேயே துரதிர்ஷ்டவசமானது. இந்திய அணியில் பேட்டிங், பந்துவீச்சு என அனைத்துமே பலமாக இருக்கின்றது. அவர்களை பாகிஸ்தானால் வீழ்த்த முடியாது.
என்னை கேட்டால் இலங்கை அணியால் மட்டும் தான் இந்தியாவுக்கு சவால் அளிக்க முடியும் என்று நினைக்கின்றேன் என்று பாசித் அலி கூறியுள்ளார். வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி தங்களது முதல் போட்டியில் செப்டம்பர் 10ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் மோதுகிறது செப்டம்பர் 14ஆம் தேதி இந்தியா பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன ம் செப்டம்பர் 19ஆம் தேதி இந்திய அணி ஓமனை எதிர்கொள்கிறது.


Click it and Unblock the Notifications