For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Asia Cup: பாகிஸ்தானை வீழ்த்தினாலும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறாத இந்தியா.. இன்னும் என்ன சிக்கல்?

துபாய்: 2025 ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்திய அணி, புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. மேலும், 2025 ஆசியக் கோப்பை 'சூப்பர் 4' சுற்றுக்கு கிட்டத்தட்ட தகுதி பெற்றுவிட்டது என்றே சொல்லலாம். நெட் ரன் ரேட் அடிப்படையில் இந்திய அணி தற்போது பெரிய முன்னேற்றத்தை பெற்றுள்ளது.

எனினும், ஓமன் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகோ அல்லது பாகிஸ்தான் - ஐக்கிய அரபு அமீரகம் மோதும் போட்டிக்கு பிறகோ தான் இந்திய அணியின் சூப்பர் 4 வாய்ப்பு 100 சதவீதம் உறுதி ஆகும்.

இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு முன்னதாக, இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகளைப் பெற்றிருந்தன. ஆனால், இந்தப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியதன் மூலம், இந்திய அணி 2 போட்டிகளில் 2 வெற்றியுடன் 4 புள்ளிகளைப் பெற்று, 'குரூப் ஏ' பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் நெட் ரன் ரேட் (NRR) +4.793 ஆக உள்ளது. அடுத்து ஓமன் அணியையும் இந்தியா வீழ்த்தும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அப்படி நடனத்தால் இந்தியா அப்போது 6 புள்ளிகளை பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும்.

Asia Cup 2025 Points Table India Qualifies for Super 4 by Crushing Pakistan What s Pakistan s Status

பாகிஸ்தானின் சூப்பர் 4 வாய்ப்பு எப்படி?

இந்திய அணியிடம் படுதோல்வி அடைந்தாலும், பாகிஸ்தான் அணியின் சூப்பர் 4 வாய்ப்பு இன்னும் உயிர்ப்புடன் தான் உள்ளது. பாகிஸ்தான் அணி 2 போட்டிகளில் 1 வெற்றி, 1 தோல்வியுடன் 2 புள்ளிகளைப் பெற்று, புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தப் பிரிவில் உள்ள மற்ற அணிகளான ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இன்னும் ஒரு வெற்றியைக்கூடப் பெறவில்லை.
அவை தங்களுக்குள் மோதும் போட்டியில், வெற்றி பெறும் அணி 2 புள்ளிகளைப் பெறும். இருப்பினும், நெட் ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தானை (+1.649) முந்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. எனவே, 'குரூப் ஏ' பிரிவிலிருந்து இந்தியாவைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணி இரண்டாவது அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளது.

ஆசிய கோப்பை புள்ளிப் பட்டியல் (இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்குப் பிறகு):

குழு ஏ

1 - இந்தியா - போட்டிகள்: 2, வெற்றி: 2, தோல்வி: 0, புள்ளிகள்: 4, நெட் ரன் ரேட்: +4.793
2 - பாகிஸ்தான் - போட்டிகள்: 2, வெற்றி: 1, தோல்வி: 1, புள்ளிகள்: 2, நெட் ரன் ரேட்: +1.649
3 - ஓமன் - போட்டிகள்: 1, வெற்றி: 0, தோல்வி: 1, புள்ளிகள்: 0, நெட் ரன் ரேட்: -4.650
4 - ஐக்கிய அரபு அமீரகம் - போட்டிகள்: 1, வெற்றி: 0, தோல்வி: 1, புள்ளிகள்: 0, நெட் ரன் ரேட்: -10.483

குழு பி

1 - ஆப்கானிஸ்தான் - போட்டிகள்: 1, வெற்றி: 1, தோல்வி: 0, புள்ளிகள்: 2, நெட் ரன் ரேட்: +4.700
2 - இலங்கை - போட்டிகள்: 1, வெற்றி: 1, தோல்வி: 0, புள்ளிகள்: 2, நெட் ரன் ரேட்: +2.595
3 - வங்கதேசம் - போட்டிகள்: 2, வெற்றி: 1, தோல்வி: 1, புள்ளிகள்: 2, நெட் ரன் ரேட்: -0.650
4 - ஹாங்காங் - போட்டிகள்: 2, வெற்றி: 0, தோல்வி: 2, புள்ளிகள்: 0, நெட் ரன் ரேட்: -2.889

Story first published: Monday, September 15, 2025, 0:02 [IST]
Other articles published on Sep 15, 2025
English summary
Asia Cup 2025 Points Table: India Qualifies for Super 4 by Crushing Pakistan; What's Pakistan's Status?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+