Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை ரஹானே தேர்வு செய்த பிளேயிங் XI.. இவங்க 2 பேரை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்

மும்பை: ஆசிய கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ தேர்வுக்குழு அன்மையில் அறிவித்தது. சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து அணியின் கேப்டனாக இருப்பார். மேலும் ஷுப்மன் கில், அக்ஸர் பட்டேலுக்கு பதிலாக துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சுப்மன் கில் ஜூலை 2024க்குப் பிறகு முதல் முறையாக டி20 அணிக்கு திரும்பியுள்ளார்.

சஞ்சு சாம்சனை பேட்டிங் வரிசையில் முதலிடத்தில் பார்க்க விரும்புவதாக அஜிங்கியா ரஹானே கூறினார். இது குறித்து பேசிய அவர், "ஷுப்மன் கில் அணிக்கு திரும்பியுள்ளார், அவர் பெரும்பாலும் அபிஷேக் ஷர்மாவுடன் தொடக்க வீரராக விளையாடுவார். தனிப்பட்ட முறையில், சஞ்சு சாம்சனை அணியில் பார்க்க விரும்புகிறேன்."

Rahane

"ஏனெனில் அவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். மிகவும் நம்பிக்கையானவர், மிகச் சிறந்த அணி உறுப்பினர். இது மிக முக்கியமான விஷயம் என்று நான் கருதுகிறேன். சஞ்சு ஒரு சிறந்த அணி உறுப்பினர், ஆனால் இது அணி நிர்வாகத்திற்கு ஒரு நல்ல பிரச்சனை. என் கருத்துப்படி, சஞ்சு சாம்சன் பெரும்பாலும் வெளியில் உட்கார வேண்டியிருக்கும்.

இருப்பினும் நான் கூறியது போல், அவர் விளையாடி, விளையாடும் லெவனில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் ஷுப்மன் கில் மற்றும் அபிஷேக் ஷர்மா அணிக்கு தொடக்க இன்னிங்ஸை ஆடுவார்கள்," என்று ரஹானே கூறினார். இதே போன்று பும்ரா, அர்ஷ்தீப் ஒன்றாகப் பந்து வீசுவதைப் பார்க்க ஆவலாக உள்ளேன் என்று ரஹானே தெரிவித்தார்.

"இந்த ஆசிய கோப்பையில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஒன்றாகப் பந்து வீசுவதைப் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன். பும்ராவைப் பற்றி அதிகம் பேச வேண்டியதில்லை. அவர் எவ்வளவு ஆபத்தானவர் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். அர்ஷ்தீப் சிங், மிகவும் நம்பிக்கையானவர்."

"பந்தை இரு திசைகளிலும் ஸ்விங் செய்கிறார். அவர் நேராகவும், அகலமான யார்க்கர்களையும் வீச முடியும்.11வது வீரர் மைதானத்தின் தன்மையைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார். ஏனெனில் நாம் துபாயில் விளையாடுகிறோம். மைதானத்தின் நிலைமைகளைப் பொறுத்து வருண் சக்ரவர்த்தி அல்லது ஹர்ஷித் ரானா தேர்வு செய்யப்படலாம்," என்று அவர் கூறினார்.

அஜிங்கியா ரஹானேவின் 2025 ஆசிய கோப்பைக்கான விளையாடும் லெவன்: ஷுப்மன் கில், அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹார்திக் பாண்ட்யா, ஜிதேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), அக்ஸர் பட்டேல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி/ஹர்ஷித் ரானா.

Story first published: Thursday, August 21, 2025, 22:25 [IST]
Other articles published on Aug 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+