Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை.. கில் அல்ல.. சஞ்சு சாம்சனுக்கு பிரச்சினையே இந்த ஆர்சிபி வீரர் தான்.. இர்பான் பதான்

மும்பை: ஆர்சிபி அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜிதேஷ் ஷர்மா, ஐபிஎல் 2025 தொடரில் முக்கிய பங்காற்றியதால், வரவிருக்கும் ஆசிய கோப்பையில் சஞ்சு சாம்சன் இடத்தை பிடிக்க வாய்ப்பு இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை தொடரில் சுப்மன் கில் சேர்க்கப்பட்டுள்ளதால், அபிஷேக் ஷர்மாவுடன் இணைந்து யார் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. கேரள கிரிக்கெட் லீக் 2025 சீசனில் சஞ்சு சாம்சனின் சிறப்பாக விளையாடி வரும் நிலையில், இர்பான் பதான் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

Irfan Pathan on asia cup

இது குறித்து பேசிய அவர், "இது ஒரு கடினமான முடிவு, இல்லையா? சஞ்சு நன்றாக ஆடியுள்ளார். ஆனால் அவரது நிலைத்தன்மை குறித்து ஒரு கேள்வி உள்ளது. அவர் சதங்கள் அடித்தார். பின்னர் மலிவாக அவுட்டானார். இதில் ஒரு முறை இருந்தது. ஆனால் அவர் நன்றாகவே செயல்பட்டார். மறுபுறம், அபிஷேக் ஷர்மாவால் பந்து வீச முடியும்.

மேலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் அபாரமாக உள்ளது. எனவே, அபிஷேக் நிச்சயமாக அணியில் இருப்பார். ஜிதேஷ் ஷர்மா அணியில் இடம்பெற்றதால், இப்போது ஷுப்மன் கில் மற்றும் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஜிதேஷ் ஷர்மாவை பிளேயிங் லெவனில் வைக்க வாய்ப்பு உள்ளது. ஷுப்மன் கில்லை இடம்பெறச் செய்வதால் தான் இந்த சிக்கல் உள்ளது.

சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காமல் போகலாம். இது கடினமானது. சஞ்சு மிடில் ஆர்டரில் ஆட முயற்சித்து வருவதை நான் கவனித்தேன். அவர் ஐந்தாவது இடத்தில் ஆட முடியுமானால், ஜிதேஷ் ஷர்மா அணியில் இருக்க மாட்டார். அப்போது சாம்சன் மிடில் ஆர்டரில் ஆடலாம். ஆனால், சுப்மன் கில் தொடக்கத்தில் ஆட வேண்டும். ஏனெனில் திலக் வர்மா மூன்றாவது இடத்தில் நன்றாக செயல்பட்டு வருகிறார்," என்று இர்பான் பதான் கூறினார்.

இந்திய அணி ஆசிய கோப்பையில் பாகிஸ்தான், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன் குரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான வெள்ளைப் பந்து தொடரில் ஐந்து போட்டிகளைக் கொண்ட தொடரில் அபாரமாக வென்றது.

ஆசிய கோப்பை 2025-க்கான இந்திய அணி:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணைக் கேப்டன்), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ஜிதேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ஜஸ்ப்ரீத் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங்.

இந்திய அணி தனது முதல் போட்டியை செப்டம்பர் 10-ஆம் தேதி யுஏஇ-க்கு எதிராக துபாயில் ஆடவுள்ளது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 14-ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான ஆட்டம் நடைபெறும். சாம்சனுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா, அல்லது கில் மற்றும் ஜிதேஷ் ஆகியோரின் இடங்கள் உறுதியாகுமா என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

Story first published: Tuesday, September 2, 2025, 21:09 [IST]
Other articles published on Sep 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+