Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை 2025.. "உங்க 2 பேரில் ஒருவருக்கு தான் இடம்.." இந்திய அணி குறித்து கவாஸ்கர் கருத்து

மும்பை: கடந்த ஒரு மாதமாக எந்த ஒரு கிரிக்கெட் போட்டிகளும் இந்திய அணி பங்கேற்காதது தான் இந்திய ரசிகர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். இந்த நிலையில் மீண்டும் கிரிக்கெட் சீசன் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இம்முறை t20 போட்டிகளாக நடைபெறுவதால், ரசிகர்களுக்கு நிச்சயம் ரன் விருந்து இருக்கும். இதேபோன்று சூரியகுமார், ஹர்திக் பாண்டியா, கில், சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா, பும்ரா உள்ளிட்ட வீரர்கள் அணிக்கு திரும்பி இருப்பதால் நிச்சயம் இந்த தொடர் ஹிட் அடிக்கும்.

Gavaskar

இந்த நிலையில் இந்திய அணியில் ஃபினிஷர் பொறுப்புக்கு யார் வரப்போகிறார் என்பது குறித்து கவாஸ்கர் பதிலளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இந்திய அணியின் பிளேயிங் லெவனின் கடும் போட்டி ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இரண்டு திறமை வாய்ந்த வீரர்களில் ஒருவருக்கு தான் இடம் கிடைக்கும் என கூறியிருக்கின்றார்.

இது குறித்து பேசிய அவர், சுழற் பந்துவீச்சு ஆல் ரவுண்டராக அக்சர் பட்டேல் பிளேயிங் லெவனில் வந்துவிடுவார். அவர் இடது கை பேட்ஸ்மேன் என்பதால் கண்டிப்பாக நான்கு ஓவர்கள் வீசிவிடுவார். இதனால் பிளேயிங் லெவனில் அவர் கண்டிப்பாக இருப்பார். இதன் காரணமாக பினிஷர் பொறுப்பில் ரிங்கு சிங் அல்லது சிவம் துபே என இரண்டு பேரில் ஒருவர் மட்டுமே அணியில் இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார்.

எனினும் சிவம் துபே ஒரு ஆல்ரவுண்டராக இருந்தாலும், கடந்த சில போட்டிகளாக அவர் பெரிய அளவு பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை. மேலும் சிஎஸ்கே அணி அவருடைய பந்துவீச்சுத் திறனை பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் கம்பீரை பொறுத்தவரை அதிக அளவு ஆல்ரவுண்டர்களை அணியில் வைத்திருக்க விரும்புவார்.

இதனால் சிவம் துபேக்கு முன்னுரிமை வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் தற்போதைய பாரம் படி சிவம் துபைவை விட ரிங்கு சிங் அபாரமாக விளையாடி வருகிறார். மேலும் அவர் ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் சுழற் பந்துவீச்சை கூட வீச முடியும். தற்போது நடைபெறும் ஆசிய கோப்பை போட்டிகள் சுழற் பந்துவீச்சிக்கு சாதகமான ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் நடைபெற உள்ளது. இதனால் சிவம் துபேக்கு வாய்ப்பு கிடைக்குமா? இல்லை ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Saturday, September 6, 2025, 6:49 [IST]
Other articles published on Sep 6, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+