Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Asia Cup: பறந்து சென்ற ஆஃப் ஸ்டம்ப்பு.. உறைந்து நின்ற சுப்மன் கில்.. உள்ளூர் பவுலர் செய்த சம்பவம்

துபாய்: 2025 ஆசியக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரரும், துணை கேப்டனுமான சுப்மன் கில் வலைப் பயிற்சியின்போது உள்ளூர் பந்துவீச்சாளர் ஒருவரின் பந்தில் மோசமாக ஆடி அதிர்ச்சியளித்துள்ளார். இந்தச் சம்பவம் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பரவி வருகிறது.

சுமார் ஒரு வருடத்திற்கும் மேலான இடைவெளிக்கு பிறகு இந்திய டி20 அணிக்கு திரும்பியுள்ளார் சுப்மன் கில். கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடியிருந்த அவர், வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

Asia Cup 2025 Shubman Gill Clean Bowled in Net Session Ahead of Asia Cup

மேலும், 2025 ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், புதன்கிழமை துபாய் சர்வதேச மைதானத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராகத் தொடங்கும் முதல் போட்டியில் அவர் களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில், துபாயில் உள்ள ஐசிசி அகாடமியில் இந்திய வீரர்கள் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விருப்பப் பயிற்சியில் சுப்மன் கில் கலந்து கொண்டார். பயிற்சியின்போது அவர் மிகவும் நேர்த்தியாகவும், நல்ல ஃபார்மிலும் காணப்பட்டார். குறிப்பாக, வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளை தனது டிரேட்மார்க் ஷாட்டான இன்சைடு-அவுட் மூலம் எக்ஸ்ட்ரா கவர் திசையில் அழகாக விரட்டி ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்தார்.

அனைத்தும் சரியாகச் சென்று கொண்டிருந்த நிலையில், யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது. உள்ளூர் இளம் பந்துவீச்சாளர் ஒருவர் வீசிய மின்னல் வேக பந்து, சுப்மன் கில்லின் கணிப்பைத் தவிடுபொடியாக்கி, அவரது ஆஃப்-ஸ்டம்பைப் பதம் பார்த்தது. இதைச் சற்றும் எதிர்பாராத சுப்மன் கில், ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்து போனார். இந்த எதிர்பாராத நிகழ்வு மட்டுமே சுப்மன் கில் பயிற்சியில் ஒரு சிறிய கரும்புள்ளியாக அமைந்தது. இருப்பினும், ஒட்டுமொத்தமாக அவரது பேட்டிங் பயிற்சி திருப்திகரமாகவே அமைந்திருந்தது.

சுப்மன் கில் ஒருபுறம் அதிர்ச்சியளித்தாலும், மறுபுறம் அவரது தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படும் இளம் வீரர் அபிஷேக் சர்மா, தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் மிரள வைத்துள்ளார். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த தனது பேட்டிங் பயிற்சியில், அபிஷேக் சர்மா சிக்ஸர் மழை பொழிந்தார்.

அவர் அடித்த பந்துகள் மைதானத்திற்கு வெளியே பறந்த வண்ணம் இருந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, தனது அபாரமான கண்-கை ஒருங்கிணைப்பு மூலம், சுமார் 25 முதல் 30 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு, ஆசியக் கோப்பையில் பங்கேற்க உள்ள மற்ற அணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விருப்பப் பயிற்சி நாளில், கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் கலந்து கொண்ட நிலையில், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் மற்றும் ஹர்ஷித் ராணா உள்ளிட்ட மூத்த வீரர்கள் ஓய்வெடுத்துக் கொண்டனர்.

Story first published: Wednesday, September 10, 2025, 16:58 [IST]
Other articles published on Sep 10, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+