Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இலங்கையின் மானத்தை காப்பாற்றிய மெண்டீஸ்.. வெளியேறிய ஆப்கானிஸ்தான்.. சூப்பர் 4க்கு வங்கதேசம் தகுதி

அபுதாபி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணிகள் வித்தியாசத்தில் இலங்கை அணி போராடி வீழ்த்தியது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி தொடரை விட்டு வெளியேறிய நிலையில், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது.

அபுதாபியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிகள் குர்பாஷ் 14 ரன்கள், செதுக்குல்லா அடல் 18 ரன்களிலும் இப்ராஹீம் சாட்ரன் 24 ரன்களிலும் ஆட்டமிழ்க்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

Srilanka beat Afghanistan

ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 130 ரன்கள் தான் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி ஓவரில் முஹம்மது நபி அபாரமாக விளையாடி 5 சிக்ஸர்களை விளாசினார். ஆறாவது சிக்சர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இரண்டாவது ரன் ஓடும்போது ரன் அவுட் ஆனார்.

கடைசி ஓவரில் மட்டும் முஹம்மது நபி 32 ரன்கள் எடுக்க ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது இலங்கை அணியின் பந்துவீச்சில் நுவான் துஷாரா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை அடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது.

இந்த போட்டியில் இலங்கை அணி குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் தோற்றாலும், சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும் என்ற நிலையில் இருந்ததால், அந்த அணி வீரர்கள் ஆப்கானிஸ்தான் இலக்கு அருகே செல்ல வேண்டும் என்ற உத்வேகத்தில் விளையாடினர். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிசாங்கா 6 ரன்களிலும் காமில் மிஸ்ரா நான்கு ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

எனினும் மற்றொரு தொடக்க வீரராக இன்று அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். ஒரு புறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் குஷல் மெண்டிஸ் மட்டும் நங்கூரம் போட்டு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக இலங்கை அணி ஸ்கோர் வேகமாக முன்னேறியது. எனினும் முக்கிய கட்டத்தில் குசல் பெரேரா 28 ரன்களிலும் கேப்டன் அசலங்கா 17 ரன்களிலும் ஆட்டம் இழக்க என ஒரு புறம் ஆப்கானிஸ்தான அணி தங்களுடைய பந்துவீச்சை கட்டுக்கோப்பாக வீசி இலங்கைக்கு அழுத்தம் கொடுத்தது.

மறுபுறம் குசன் மெண்டிஸ் 40 பந்துகளில் அரை சதம் அடிக்க கடைசியில் கொஞ்சம் அதிரடி காட்டினார் இதனால் இலங்கை அணி 18.4 ஓவர்கள் எல்லாம் நான்கு விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கு எட்டியது குசல் மெண்டிஸ் 52 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். குசல் மெண்டிஸ் தனது கடைசி 12 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இலங்கை அணி பி பிரிவில் முதலிடத்தை பிடித்தது. வங்கதேச அணி இரண்டாவது இடம் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. கடந்த t20 உலக கோப்பையில் அரை இறுதி சுற்றுக்கு வந்த ஆப்கானிஸ்தான அணி தற்போது தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது.

Story first published: Friday, September 19, 2025, 0:36 [IST]
Other articles published on Sep 19, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+