Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை 2025: சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் எப்போது? அட்டவணை இதோ

துபாய்: ஆசிய கோப்பை 2025 ஆம் ஆண்டு தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை ஏட்டி இருக்கிறது. லீக் சுற்றுகள் வெள்ளிக்கிழமையுடன் முடிவடையும் நிலையில், வரும் சனிக்கிழமை முதல் சூப்பர் 4 சுற்று தொடங்குகிறது. இந்த நிலையில் ஏ பிரிவில் இருந்து எதிர்பார்த்தபடி இந்தியா முதலிடத்தில் இருந்தும், பாகிஸ்தான் இரண்டாவது இடத்திலிருந்தும் தகுதி பெற்றிருக்கிறது.

இந்த தருணத்தில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா எப்போது மோதும், எந்த அணியுடன் மோதும் என்பதை தற்போது பார்க்கலாம். இந்திய அணி தங்களுடைய முதல் சூப்பர் 4 ஆட்டத்தை வரும் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது. இதில் இந்தியாவும் பாகிஸ்தான் அணியும் மீண்டும் ஒருமுறை பலப்பரீட்சை நடத்துகின்றன.

Asia cup 2025

இந்த போட்டி துபாயில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதன்படி இந்திய அணி தங்களுடைய இரண்டாவது சூப்பர் 4 சுற்ற ஆட்டத்தை வரும் செப்டம்பர் 24ஆம் தேதி புதன்கிழமை துபாயில் எதிர்கொள்கிறது. இதில் இந்திய அணி, வங்கதேசம் அல்லது ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ளும். இந்தப் போட்டி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

இதை அடுத்து வெள்ளிக்கிழமை செப்டம்பர் 26 ஆம் தேதி இந்திய அணி தங்களுடைய கடைசி சூப்பர் 4 சுற்ற ஆட்டத்தை விளையாடுகிறது. இதில் இந்திய அணி இலங்கையை எதிர்கொள்கிறது. இந்த போட்டி துபாயில் தான் நடைபெற உள்ளது. இதேபோன்று பாகிஸ்தான் அணிக்கான அட்டவணையில் தற்போது வெளியாகியிருக்கிறது. முதல் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுடன் எதிர்கொள்ளும் பாகிஸ்தான அணி செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 23ஆம் தேதி இலங்கையுடன் விளையாட உள்ளது.

அதை தொடர்ந்து செப்டம்பர் 25ஆம் தேதி வங்கதேசம் அல்லது ஆப்கானிஸ்தானை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது. இந்தியா பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் தான் நடைபெறுகிறது. இந்த சூப்பர் 4 சுற்றில் நான்கு அணிகள் தங்களுக்குள் ஒருமுறை மோதும். இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இறுதிப் போட்டி செப்டம்பர் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெற உள்ளது.

Story first published: Thursday, September 18, 2025, 13:13 [IST]
Other articles published on Sep 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+