Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Asia cup: சூப்பர் 4 சுற்றுக்கு முதல் அணியாக இந்திய தகுதி.. UAE வெற்றியால் நிகழ்ந்த மேஜிக்

துபாய்: ஆசியக் கோப்பை லீக் சுற்றில் ஓமன் அணியை 42 ரன்கள் வித்தியாசத்தில் யுஏஇ அணி வீழ்த்தியது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தியா சூப்பர் 4 சற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அபுதாபியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதில் களமிறங்கிய யூ ஏ இ அணி அபாரமாக விளையாடுவது முதல் விக்கெடுக்கு அலிசான் மற்றும் முகமது வசிம் ஜோடி 88 ரன்கள் சேர்த்தது. இதில் அலிசான் 38 பந்துகளில் 51 ரன்களும், முகமது வசிம் 54 பந்துகளில் 69 ரன்களும் சேர்த்தனர்.

UAE vs OMAN

நடுவரிசையில் முகமது சொகைப் 21 ரன்களும், ஹர்ஷித் கவுசிக் 19 ரன்கள் எடுக்க அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய ஓமன் அணி ஆரம்பம் முதலில் தடுமாறியது. முன்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க 50 ரன்கள் சேர்ப்பதற்குள் அந்த அணி ஐந்து விக்கெட்டுகளை தடுமாறியது.

நடுவரிசையில் ஆரியன் பிஸ்ட் 24 ரன்களிலும் விநாயக் சுக்லா 20 ரன்களும் எடுக்க ஓமன் அணி 18.4 ஓவரில் 13 ரன்களில் சுருண்டது. யுஏஇ அணியில் ஜுனைட் சித்திக் அபாரமாக பந்துவீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் யுஏஇ அணி இரண்டு புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது. இதன் மூலம் வெறும் 2 போட்டியில் மட்டுமே விளையாடிய நிலையில் இந்திய அணி 4 புள்ளிகள் உடன் சூப்பர் 4 சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றிருக்கிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான், யுஏஇ அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஒருவேளை பாகிஸ்தான் அணி புறக்கணித்தால்,யு.ஏ. இ அணி தகுதி பெற்ற விடும். நடுவர் ஆண்டி பைக்கிராப்ட் நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் போட்டி நடுவராக தொடர்ந்தால், uae அணிக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்று பாகிஸ்தான் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, September 15, 2025, 23:44 [IST]
Other articles published on Sep 15, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+