மும்பை: ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டிருப்பது ரசிகர்களை கோபப்படுத்திருக்கின்றது. பும்ரா, ஆர்ஸ்தீப் சிங் ஆகியோர் அணியில் உள்ள நிலையில் மூன்றாவது வீரராக முகமது சமி, பிரசித் கிருஷ்ணா அல்லது சிராஜ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதில் முகமது சமி காயத்திலிருந்து மீண்டு வருவதால் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை என்பதில் காரணத்தை புரிந்து கொள்ள முடியும். அது மட்டுமில்லாமல் பிரசித் கிருஷ்ணா முஹமது சிராஜ் ஆகியோர் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடி விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இருவருக்கும் ஓய்வு வேண்டும் என்பதற்காக இந்த தொடரில் இடம் கிடைக்கவில்லை என்று கூட காரணத்தை எடுத்துக் கொள்ளலாம். அப்படி இருக்கும் போது இந்த பட்டியலில் கலீல் அகமதுக்கு தான் டி20 அணியில் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். இதுவரை இந்திய அணிக்காக 18 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
இடது கை வேகப்பந்து வீச்சாளரான கலீல் அகமது, ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி ரசிகர்களின் நம்பிக்கையை பெற்றிருக்கிறார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கலீல் அகமது 14 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கலீல் அஹமத், பவர் பிளேவில் அபாரமாக பந்து வீசக்கூடிய திறமையை கொண்டவர்.
இதனால் கலீல் அகமதுக்கு தான் வாய்ப்பு வழங்கிருக்க வேண்டும். ஆனால் தேர்வுக்குழு இதுவரை இந்திய அணிக்காக ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடிய ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஹர்சித்தை விட கலீல் தான் நன்றாக பந்து வீசக்கூடியவர். இதனால் ஏன் ஹர்ஷித் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கம்பீரால் கொல்கத்தா அணியில் அறிமுகப்படுத்தப்பட்டதால் ஹர்சித் ராணாவுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.